விராட் கோலியை விட என் தம்பி உமர் சிறந்தவன்.. நேத்துதான் ஆதாரங்கள் கிடைச்சது – கம்ரன் அக்மல் பேச்சு

0
338
Virat

நடப்பு ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்று முன்னேற முடியாமல் முதல் சுற்றுடன் அதிர்ச்சி கொடுத்து வெளியேறியிருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் மீது நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கமரன் அக்மல் சில சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார்.நடப்பு ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்று முன்னேற முடியாமல் முதல் சுற்றுடன் அதிர்ச்சி கொடுத்து வெளியேறியிருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் மீது நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கமரன் அக்மல் சில சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மோதி கொண்ட போட்டியில், இந்திய அணிக்காக கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் மிகச் சிறப்பாக வீசினார். பரபரப்பான அந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் கம்ரன் அக்மல் சர்ச்சைக்குரிய முறையில் அர்ஸ்தீப் சிங் பற்றி பேசியது பெரிய பரபரப்பானது. இதற்கு ஹர்பஜன் சிங் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். பிறகு கமரன் அக்மல் குறிப்பிட்ட அந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

எல்லா பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, கேப்டன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர் மட்டும் இந்திய தரப்பை வைத்து ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய தம்பி உமர் அக்மல் டி20 உலகக்கோப்பை தொடர்களில் விராட் கோலியை விட சிறந்தவர் என்று பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது “நேற்று எனக்கு சில புள்ளி விவரங்கள் கிடைத்தன. நான் என்னுடைய தம்பி உமர் அக்மல் பற்றி பேசுகிறேன். ஒட்டுமொத்த செயல்பாடுகளின் அடிப்படையில் என்னுடைய உமர் விராட் கோலி அருகில் இல்லை. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடர்களில் விராட் கோலியை விட உமர் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் அடித்திருக்கிறார். இது எனக்கு நேற்றுதான்” தெரியவந்தது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை.. நேரடியாக தகுதி பெறும் அணிகள் எவை.. பாக் நியூசி தகுதிச்சுற்றில் விளையாட வேண்டுமா?.. முழு விபரங்கள்

விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடர்களில் அதி ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார். அவர் டி20 உலகக்கோப்பைகளில் மொத்தம் 30 போட்டிகளில் 67.41 ரன் ஆவரேஜ் உடன், 130.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 1146 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.