2026 டி20 உலககோப்பை.. நேரடியாக தகுதி பெறும் அணிகள் எவை.. பாக் நியூசி தகுதிச்சுற்றில் விளையாட வேண்டுமா?.. முழு விபரங்கள்

0
762
T20iwc2026

தற்போது ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்று வுடன் பெரிய அணிகளான நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறியிருக்கின்றன. இதன் காரணமாக அடுத்த டி20 உலகக்கோப்பையில் எந்த அணிகள் நேரடியாக தகுதி பெறும் என்பது குறித்து இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஐசிசி பத்தாவது டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்து இந்தியா மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடக்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரிலும் மொத்தம் 20 அணிகள் பங்கு பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் டி20 உலக கோப்பைக்கு நேரடியாக 12 அணிகள் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மீதமுள்ள எட்டு அணிகள் தகுதிச்சுற்று நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் நடப்பு டி20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் எட்டு அணிகளும் நேரடியாக அடுத்த டி20 உலகக்கோப்பை வந்துவிடும். மேலும் அடுத்த டி20 உலக கோப்பையை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் இலங்கையும் தொடரை நடத்துகின்ற காரணத்தினால் நேரடியாக தகுதி பெற்று விடும்.

இந்த வகையில் தற்பொழுது 9 அணிகள் அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு வெளிப்படையாக தகுதி பெறுகின்றன. மொத்தம் நேரடியாக தகுதி பெறுவதற்கு 12 அணிகள் தேவை என்பதால், மீதம் உள்ள மூன்று அணிகளை தேர்வு செய்ய, ஜூன் முப்பதாம் தேதி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில், எந்த மூன்று நாடுகள் முன்னணியில் இருக்கிறதோ அந்த நாடுகள் சேர்த்துக் கொள்ளப்படும்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீருக்கு நிச்சயம் இந்த விஷயத்தை செய்யணும்.. அப்பதான் பயிற்சியாளரா வரமுடியும் – அனில் கும்ப்ளே பேட்டி

தற்போது நியூசிலாந்து டி20 கிரிக்கெட்டில் ஆறாவது இடத்திலும் பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் தரவரிசை பட்டியலில் இருக்கிறது. எனவே இதன் அடிப்படையில் இந்த இரண்டு அணிகளுமே தகுதி பெற்று விடும். இவர்கள் தகுதி சுற்றில் விளையாட வேண்டிய அவசியம் வராது என்பது குறிப்பிடத்தக்கது.