“பிசிசிஐ மாஸ் நியூஸ் பிளேயர்ஸ்க்கு குடுத்துருக்கு.. நல்ல நிர்வாகம்னா இதான்யா” – பாகிஸ்தான் கம்ரன் அக்மல் பேட்டி

0
167
Akmal

பொதுவாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். பல நேரங்களில் அணித் தேர்வில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய குறைகளை வெளிப்படுத்துவார்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் விரும்பும் வீரர்கள் வெளியில் இருப்பதும், ஃபார்மில் இல்லாத வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதுமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

- Advertisement -

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வாரியம் மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை தங்களது அணுகுமுறையில் ஏற்படுத்திக் வருகிறது. இதன் காரணமாக மிக வேகமாக எதிர்கால இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது எதிர்கால இந்திய அணியை கட்டமைப்பது மட்டுமில்லாமல், எதிர்காலத்தில் எப்பொழுதுமே இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் வலிமையாக இருப்பதற்கான வேலைகளை பிசிசிஐ ஆரம்பித்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக இந்திய அணிக்கு தேர்வாகாத மற்றும் காயத்தில் இல்லாத எல்லா வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என கண்டிப்பாக பிசிசிஐ கூறி இருக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட்டை காப்பாற்றுவதன் மூலம்தான், இந்திய தேசிய கிரிக்கெட்டை வலிமையாக வைத்துக் கொள்ள முடியும் என பிசிசிஐ உறுதியாக நம்புகிறது.

- Advertisement -

பிசிசிஐ நோக்கத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவரும் சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். பிசிசிஐ வீரர்கள் மேல் இவ்வளவு அதிரடியாக எப்பொழுதுமே நடவடிக்கை எடுக்காது. தற்பொழுது இந்திய கிரிக்கெட்டில் பிசிசிஐ அணுகுமுறை மிகவும் வியப்பான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடும் இவரை போன்ற வீரர்கள் கிரிக்கெட்டை மதிக்கவில்லை என்றால், அது இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான முன் உதாரணமாக அமையும்.

பிசிசிஐ சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறது. சேதத்தை கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. இப்படி இல்லாமல் இவர்களுக்கு சம்பள ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருந்தால், இதைத்தொடர்ந்து பல வீரர்கள் தங்களுடைய சொந்த முடிவின்படி விளையாடி இருப்பார்கள்.

இதையும் படிங்க : “விளையாட வந்ததுமே ரெஸ்ட் வேணுமா?.. அப்படி என்ன வேலை செய்றிங்க?” – சவுரவ் கங்குலி காரசாரமான கருத்து

இந்திய வீரர்களில் அடுத்து யாரும் இப்படி ஒன்றை செய்ய நினைக்க கூடாது என்று பிசிசிஐ தங்கள் வீரர்களுக்கு சிறப்பான செய்தி ஒன்றை அதிரடி நடவடிக்கை மூலம் காட்டி இருக்கிறது. இது ஒரு நல்ல நிர்வாகத்திற்கான உதாரணம். விளையாட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.