“விளையாட வந்ததுமே ரெஸ்ட் வேணுமா?.. அப்படி என்ன வேலை செய்றிங்க?” – சவுரவ் கங்குலி காரசாரமான கருத்து

0
343
Ganguly

உலக கிரிக்கெட் அணிகளில் பெரிய வருமானத்தை ஈட்டக்கூடிய அணியாக இருக்கும் இந்திய அணி ஒரு வருடத்தில் அதிக போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவைப்படுகிறது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால், அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கான இளம் வீரர்களை கண்டறிய தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையின் காலத்தில் நிறைய வீரர்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதற்கு பின்னால் வீரர்களின் பணிச்சுமை மேலாண்மையே காரணமாக அமைந்திருக்கிறது.

அதே சமயத்தில் கபில்தேவ் போன்ற மூத்த வீரர்கள் பணிச்சுமை என்பதை மிகைப்படுத்தி வீரர்கள் பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு தேவையில்லாமல் அடிக்கடி ஓய்வு கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட மறுத்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் இந்திய வீரர்கள் சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். திடீரென உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் முக்கியமாக பிசிசிஐ வலியுறுத்தி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும் பொழுது “உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது குறித்து இப்படி நடப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். யாரோ உள்நாட்டு கிரிக்கெட்டை ஓய்வில் இருந்தும் விளையாடாமல் மறுத்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான வீரர்கள் தங்கள் ஓய்வில் இருக்கும் பொழுது ரஞ்சி கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பிசிசிஐ எப்போதும் சரியான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்கும் பல வீரர்கள் சிவப்புப்பந்து கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்திய அணியில் கூட விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்களை உதாரணமாக பார்க்கலாம்.

நாங்கள் விளையாடிய காலத்தில் கூட நான், சச்சின், ராகுல் டிராவிட் ஆகியோர் சிவப்பு பந்து கிரிக்கெட் நன்றாக விளையாடினோம். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து வந்து சிவப்பு பந்து கிரிக்கெட் மிகவும் நன்றாக விளையாடினார். இதனால் ஒரு வடிவத்தில் தான் நன்றாக விளையாட முடியும் என்று கிடையாது.

ரஞ்சி சீசன் ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெறுகின்ற காரணத்தினால், ரஞ்சி தொடரில் விளையாடுகின்ற வேகப்பந்துவீச்சாளர்களுக்குதான் பெரிய பணிச்சுமை இருக்கிறது. மற்றபடி பேட்ஸ்மேன்களுக்கு பெரிதான பணிச்சுமை கிடையாது. எனவே ரஞ்சி சீசன் கொஞ்சம் முன்கூட்டியே நடந்து முடியுமாறு பார்ப்பது நல்லது.

இதையும் படிங்க : பவுலிங்கில் ஆஸியை அலறவிட்ட கிளன் பிலிப்ஸ்..16 ஆண்டுகளுக்கு பிறகு மெகா சாதனை

மேலும் விளையாட வரும் ஆரம்ப காலகட்டத்திலேயே இளம் பேட்ஸ்மேன்களுக்கு என்ன பெரிய பனி சுமை உருவாகி விடப் போகிறது? இவர்கள் பணிச்சுமை காரணம் காட்டி விலகுவதை விட தொடர்ந்து விளையாடுவதுதான் நல்லது” எனக் கூறியிருக்கிறார்.