சந்தேகமே வேணாம்.. இந்திய அணி தான் ஜெயிக்கும் பாகிஸ்தான் போட்டியில்.. கம்ரன் அக்மல் உறுதி

0
1142

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் உலக கோப்பைக்காக மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த உலகக் கோப்பையில் முக்கியமாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி விளையாட உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் அதில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து கூறி இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை பொறுத்தவரை 2007ஆம் ஆண்டு இந்திய அணியும் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியும் சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு இரு நாடுகளும் டி20 உலக கோப்பை வென்றதில்லை. மேலும் இந்த இரு அணிகளுக்கிடையான போட்டி ரசிகர்களிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனென்றால் உலகக் கோப்பை கோப்பை போன்ற பெரிய தொடர்களை தவிர இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோ அல்லது பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோ என்பது சர்வதேச தொடர்களும் விளையாடுவதில்லை. இந்த இரு நாடுகளும் இது போன்ற பெரிய தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. இதனால் இது இரண்டு நாட்டு ரசிகர்களிடையே மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படும்.

அதிலும் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரத்தில் நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த போட்டியாகும். அதுவும் விராட் கோலி 18 வது ஓவரில் ஹாரிஸ் ராபின் பந்துவீச்சில் அடித்த ஒரு பிரம்மாண்ட சிக்சர் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அந்த ஒரு சிக்சரை வர்ணனையாளரான ஜெரார்ட் வார்ட்லி “அது ஒரு பேரரசரின் ஷாட்”” என்று புகழ்ந்து பேசி இருப்பார்.

- Advertisement -

இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலிடம் நடைபெற்ற இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் உரையாடலில், இந்தியா பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கம்ரான் அகமல் “நிச்சயமாக இந்தியாதான் வெற்றி பெறும்” என்று கூறி இருக்கிறார். ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரே இந்திய அணிதான் வெற்றி பெறும் என்று கூறி இருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களையும் ஆச்சரியத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இதையும் படிங்க: அகர்கர் ஒரு தப்பு பண்ணிட்டாரு.. ஜெய்ஸ்வால் பதிலா இவரை எடுத்திருக்கனும் – இயான் மோர்கன் கருத்து

இவரது இந்த பதிலை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இந்தப் போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசா கவுண்டி ஸ்டேடியத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி இரு அணி ரசிகர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையும்.