அகர்கர் ஒரு தப்பு பண்ணிட்டாரு.. ஜெய்ஸ்வால் பதிலா இவரை எடுத்திருக்கனும் – இயான் மோர்கன் கருத்து

0
5601
Morgan

ஐசிசி-யின் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் இதுகுறித்து தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.

இந்திய அணி அறிவிப்பில் மிக முக்கியமாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் என இரண்டு துவக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கிறார்கள். விராட் கோலி அணியில் இருக்கின்ற காரணத்தினால் மூன்றாவது துவக்க ஆட்டக்காரரை 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு ரிசர்வ் வீரர்களாக நான்கு வீரர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இந்த நான்கு வீரர்களில் ஒருவராக இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இருக்கிறார். துவக்க ஆட்டக்காரர்கள் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினால் மட்டுமே அவர் தேர்வு செய்யப்படுவார்.

டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட விதத்தில் இயான் மோர்கன் மிகவும் பாராட்டியிருக்கிறார். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஏதாவது வீரர்களுக்கு காயம் இருந்தால் கூட, இந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் தேர்வில் மட்டும் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் இந்த இந்திய அணியை தேர்வு செய்வதாக இருந்திருந்தால் ஒரே ஒரு வித்தியாசமான முடிவு மட்டும் எடுத்து இருப்பேன். அது ஜெய்ஸ்வால் இடத்தில் சுப்மன் கில்லை தேர்வு செய்திருப்பேன். நான் ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர் எப்படி சிந்திப்பார் செயல்படுவார்? என எனக்கு நன்றாக தெரியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் கோலி.. இந்த 2 நாள் மட்டும் இத செய்விங்களா?.. இதுதான் உங்களுக்கு கடைசி – முகமது கைப் கருத்து

மேலும் சுப்மன் கில் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக நான் பார்க்கிறேன். அவர் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பெரிய கேப்டனாக இந்திய அணிக்கு இருக்கப் போகிறார் என்று நினைக்கிறேன். மேலும் அவர் தற்போது வெளியில் இருந்தாலும் கூட, இதையெல்லாம் ஒரு ஊக்கமாக நேர்மறையான எண்ணத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.