“அஸ்வின் லயன் மாதிரி கிடையாது.. வெயிட் பண்ண மாட்டாரு.. வேற மாதிரி ரகம்” – ஜோ ரூட் சொன்ன சுவாரசிய தகவல்

0
451
Root

இந்தியா இங்கிலாந்து அணிகள் தற்போது மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி, இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் மார்ச் 7ஆம் தேதி துவங்க இருக்கிறது.

இந்த போட்டி இந்திய கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஏனென்றால் தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினின் நூறாவது டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி அமைகிறது.

- Advertisement -

இன்றைய டெஸ்ட் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சுழற் பந்துவீச்சாளர்களாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இருவரும் இருக்கிறார்கள்.

நாதன் லயன் கடந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 500 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.

இவர்கள் இருவரும் எந்த நிலையிலும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகவும் கடினமான பந்துவீச்சை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் அதிக அளவில் சந்தித்து விளையாடியிருக்கக்கூடிய இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இருவருக்கும் இடையிலான வித்தியாசங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் உறுதியாக சொல்கிறேன் ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடைய முந்தைய பந்தை உங்களை விளையாட விடாமல் பார்த்துக் கொள்வார். உங்களை கிரீசில் குறுக்கே கொண்டு வந்து, இரண்டு புறத்திலும் எட்ஜ் எடுக்க முயற்சி செய்வார்.

நாதன் லயன் தொடர்ச்சியாக டாப் ஆப் த பந்தில் ஆடுகளத்தில் இருந்து பவுன்ஸ் பெறுவதற்கு முயற்சி செய்யக் கூடியவர். இதன் மூலமாக ஷார்ட் லெக் மற்றும் லெக் ஸ்லிப் மூலம் உங்களை ஆட்டம் இழக்கவைக்க முயற்சி செய்பவர். அவர் பந்து வீசும் பகுதியில் கால் தடத்தை உருவாக்குவதற்கு, இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் நீண்ட காலமாக உதவி செய்து வருகிறார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு.. முக்கிய நட்சத்திர வீரர் 8 வாரங்கள் விளையாட மாட்டார்.. உறுதியான தகவல்

அஸ்வின் உங்களை நீண்ட நேரம் விளையாட வைத்து, சோர்வடைய வைத்து விக்கெட் எடுக்க நினைக்க மாட்டார். அவர் உங்களை ஆட்டம் இழக்க வைப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்வார். நாம் தெளிவாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் இருவருமே சிறப்பான பந்துவீச்சாளர்கள்” எனக் கூறி இருக்கிறார்