உலகில் முதல் நிலை பிரான்சிஸைஸ் டி20 லீக்காக இருந்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி இருக்கும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியில் முக்கியமானது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்!
இதுவரை மொத்தம் ஐந்து ஐபிஎல் பட்டங்களை கைப்பற்றியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி பட்டம் வென்று தற்போது நடப்புச் சாம்பியன் ஆக இருந்து வருகிறது.
மேலும் இந்த முறை ஏலத்தில் நியூசிலாந்தில் இருந்து டேரில் மிட்சல் மற்றும் ரச்சின் ரவீந்தரா என இரண்டு வெளிநாட்டு வீரர்களையும், இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் சர்துல் தாகூர் மற்றும் அன்கேப்டு வீரரான சமீர் ரிஸ்வியையும் வாங்கி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேலும் பலமான அணியாக மாறி இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் எல்லா வீரர்களும் இணைந்து பயிற்சியை துவங்க இருக்கும் நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவை தரக்கூடிய ஒரு செய்தியாக, அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே முதல் 8 வாரங்களுக்கு விளையாட முடியாது என அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தரப்பில் வெளியான அறிக்கையில் ” நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இடது கை கட்டை விரலில் காயம் அடைந்தார். ஸ்கேன் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி, கான்வே எட்டு வாரங்கள் குணம் அடைவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது” இன்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்ற பொழுது டெவோன் கான்வே 16 ஆட்டங்களில் விளையாடி 51 ரன் சராசரியில் மொத்தம் 679 ரன்கள் குவித்திருந்தார். இவர் சத்தம் இல்லாமல் யாருடைய கவனத்தையும் திருப்பாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்துக் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க : “தமிழ்நாடு அணிக்கு எதிரா சதம் அடிச்சு ஏன் அப்படி கொண்டாடினேன்?.. டாப் ஆர்டர் பெரிய ஓட்டை” – சர்துல் தாக்கூர் பேச்சு
இந்த நிலையில் இவரை வருகின்ற முதல் பாதி ஐபிஎல் தொடரில் தவறவிடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் சுழல் பந்து வீச்சை சிறப்பாக விளையாடுகின்ற ஒரு சில வெளிநாட்டு வீரர்களின் இவரும் ஒருவர். இவருடைய இடத்தில் இளம் அதிரடி நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா விளையாட வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.