புள்ளி பட்டியல்: ஒரு வெற்றி 3 இடம் தாவிய டெல்லி.. மாறிய ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப்புகள்

0
2763

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் தற்போது விறு விறுவென மூன்று இடங்கள் முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

குஜராத் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணிக்கு முதல் விக்கெட்டாக அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் வெளியேற, அதன் பிறகு மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சகா இரண்டு ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

அதன் பிறகு குஜராத் அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. சிறப்பாக பந்து வீசிய டில்லி அணியினர் ஆரம்பம் முதலே குஜராத் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதில் ரசித் கான் மட்டுமே சிறப்பாக விளையாடி 24 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 31 ரன்கள் விளாசினார். இதனால் இறுதியில் டெல்லி அணி 18 வது ஓவரில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

குறைந்த ரன்களை மிக விரைவாக சேசிங் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய டெல்லி அணி ஒன்பதாவது ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங்கில் பதினாறு ரன்களும், மற்றும் கீப்பிங் மற்றும் ஸ்டம்பிங்கில் நான்கு பேரை ஆட்டமிழக செய்த ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப்புகள்

இந்தப் போட்டிக்கு முன்னர் ஒன்பதாவது இடத்தில் இருந்த டெல்லி அணி இந்த வெற்றி இலக்கை 11 ஓவர்கள் மீதும் வைத்து சேசிங் செய்ததால் புள்ளி பட்டியலில் தற்போது மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. குஜராத் அணி தற்போது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இரண்டு அணிகளுமே தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 3 போட்டிகளில் வெற்றியும் நான்கு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கின்றன. மீதமுள்ள போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்வதன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு இந்த இரண்டு அணிகளும் முன்னேறலாம். புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இருக்கின்றன. டெல்லி மற்றும் குஜராத் அணிகள் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்யும்போது இரண்டு அணிகளுக்கும் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதையும் படிங்க: சாத்தியமே இல்லாத வேலையை ரிஷப் பண்ட் செய்கிறார்.. நேத்து இதை பார்த்து மிரண்டுட்டேன் – ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி

மீதமுள்ள அணிகளான வலுவான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்காவது இடத்திலும், லக்னோ ஐந்தாவது இடத்திலும், பஞ்சாப் அணி எட்டாவது இடத்திலும் இருக்கின்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. புள்ளிகளில் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தற்போது மும்பை அணியும் பத்தாவது இடத்தில் பெங்களூர் அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.