5வது டெஸ்ட்.. முதல் இந்தியனாக ஜெய்ஸ்வால் செய்ய இருக்கும் மெகா சாதனை.. மாறும் ரெக்கார்ட் பட்டியல்

0
306
Jaiswal

இந்திய கிரிக்கெட்டுக்கு நீண்ட நாள் கழித்து துவக்க இடத்தில் இடதுகை பேட்ஸ்மேனாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் கிடைத்திருக்கிறார். இவரது ஆட்டம் வயதுக்கு மீறிய முதிர்ச்சியாக இருப்பதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

இதுவரையில் இந்திய அணியின் உச்ச நட்சத்திர பேட்ஸ்மேன்களாக இருந்த எல்லோருமே வலதுகை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்முறையாக உச்ச நட்சத்திர இந்திய பேட்ஸ்மேனாக இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் வருவதற்கு ஜெய்ஸ்வால் மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இவரால் துவக்க இடத்தில் விளையாட முடியும் என்பதுதான் சிறப்பு. மேல் வரிசையில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருக்கின்ற காரணத்தினால், எதிரணி பந்துவீச்சை செட்டில் ஆகாமல் செய்து, கொஞ்சம் சுலபமாக ரன்கள் கொண்டு வருவதற்கு வசதியாக அமையும்.

மேலும் இவரால் ஒவ்வொரு வடிவத்திற்கும் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள முடிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சனை அடிக்காமல் இரட்டை சதம் எடுத்தார். இன்னொரு இரட்டை சதத்தில் ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். அதே சமயத்தில் பொறுமையாக விளையாடும் இவர் டி20 கிரிக்கெட்டின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் இன்டெண்ட் காட்டவும் கூடியவர்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் இவர் 655 ரன்கள் குறித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இவர் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 971 ரன்கள் சேர்த்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இவருக்கு 9வது டெஸ்ட் போட்டி ஆகும். மேற்கொண்டு இவர் 29 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் எட்டுவார். இதன் மூலம் குறைந்த டெஸ்டில் ஆயிரம் ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை படைப்பார்.

11 ஆண்டுகளுக்கு முன்பாக செதேஸ்வர் புஜாரா 11 டெஸ்ட் போட்டிகள் 18 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்தது இந்திய அளவில் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனை எப்படியும் வருகின்ற இடத்தில் உடைவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. சுனில் கவாஸ்கர் 11 டெஸ்ட் 21 இன்னிங்ஸ்களில் முதல் ஆயிரம் ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : “பிசிசிஐ வீரர்களை வலுக்கட்டாயமா எதுவுமே செய்ய முடியாது.. இதெல்லாம் பர்சனல் முடிவு” – விரிதிமான் சகா பேச்சு

இதற்கு அடுத்து வினோத் காம்ப்ளி 12 டெஸ்ட் 14 இன்னிங்ஸ், மயங்க் அகர்வால் 12 டெஸ்ட் 19 இன்னிங்ஸ், விஜய் ஹசாரே 13 டெஸ்ட் 25 இன்னிங்ஸ் என அடுத்த மூன்று இடங்களில் இருக்கிறார்கள்.