“பிசிசிஐ வீரர்களை வலுக்கட்டாயமா எதுவுமே செய்ய முடியாது.. இதெல்லாம் பர்சனல் முடிவு” – விரிதிமான் சகா பேச்சு

0
297
Saha

நேற்று முன்தினம் பிசிசிஐ இந்த ஆண்டுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டது. இதில் அதிரடியாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் நீக்கப்பட்டார்கள்.

இவர்கள் இருவருமே உடல் தகுதியோடு இருந்தும் மேலும் இந்திய அணியில் இல்லாமல் இருந்தும், உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தங்கள் மாநில அணிக்காக விளையாடவில்லை என்கின்ற காரணத்திற்காக சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இசான் கிஷான் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து விலகி, பின்பு ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஜார்க்கண்ட் மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

இது பிசிசிஐ-யை கடுமையாக கோபப்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மற்றும் உடல் தகுதியோடு இருக்கும் வீரர்கள் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும், இல்லையென்றால் கடுமையான பின் விளைவுகள் இருக்கும் என ஜெய் ஷா எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இதன் வழியாகவே தற்பொழுது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் விருதிமான் சகா கூறும் பொழுது ” இது பிசிசிஐயின் பர்சனல் முடிவு. மேலும் வீரர்களின் தனிப்பட்ட முடிவும் கூட. எந்த வீரரையும் வற்புறுத்தி விளையாட வைக்க முடியாது. நான் உடல் தகுதியுடன் இருக்கும் போதெல்லாம் கிளப் மற்றும் ஆபீஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கிறேன். நான் எப்போதும் ஒரு போட்டியை போட்டியாகவே பார்க்கிறேன். எல்லா போட்டிகளுமே எனக்கு முக்கியமானது.

- Advertisement -

இதையே எல்லா இந்திய வீரர்களும் நினைத்தால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவார்கள் அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டும் மிகவும் சிறப்பாக இருக்கும். உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கியத்துவம் எப்பொழுதும் இருப்பதாகவே நினைக்கிறேன். சர்பராஸ் கான் தொடர்ந்து ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணிக்கு தேர்வாகி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : 12 ஆண்டுகளில் முதல்முறை.. கேன் வில்லியம்சனுக்கு நடந்த பரிதாபம்.. செம ஃபார்ம் வீணா போச்சு

உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் ஜூரலை பார்த்தது இல்லை.தற்பொழுது டெஸ்ட் போட்டிகளில் கூட நான் அவரை பார்ப்பதில்லை. ஆனாலும் அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார் என்று தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.