ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர் இப்படித்தான் அடித்தேன்.. ரோகித் பாய் ஒரு விஷயம் சொன்னாரு – ஜெய்ஸ்வால் பேட்டி

0
212

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய இளம் இடதுகை ஓபனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 212 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதில் மிகக் குறிப்பாக அவர் சிக்ஸர்களை அடிப்பதில் உலக சாதனை படைத்திருந்தார். ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்கின்ற உலக சாதனை தற்போது அவரிடம்தான் இருக்கிறது.

இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஆண்டர்சன் பந்துவீச்சை அடிக்க முயற்சி செய்யவே இல்லை. மிகவும் பொறுப்புடன் கவனித்து விளையாடி, இரட்டை சதம் அடித்து அணிக்கு பெரிய ஸ்கோரை கொண்டு வந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வென்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்தது.

- Advertisement -

இதற்கு அப்படியே மாற்றாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பொழுது, ஆண்டர்சன் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது ஜெய்ஸ்வால் எப்பொழுது அமைதியாக விளையாடுவார்? எப்பொழுது அதிரடியாக விளையாடுவார்? என்பது பற்றி தெரியாமல் இருந்ததுதான்.

ஜெய்ஸ்வால் ஒரு இன்னிங்ஸில் எவ்வளவு பொறுமையாக ஆடிக் கொண்டு இருந்தாலும், அவருடைய ஜோனில் பந்து விழுந்தால், உடனடியாக பெரிய ஷாட்டுக்கு போக முடிகின்ற மனநிலையும் திறமையும் அவரிடம் இருந்தது. இதுதான் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களையும் கேப்டனையும் பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கி விட்டது. அவர் மெதுவாக விளையாடுவதை நம்பி, அவர்களால் புதிய முயற்சிகளில் அல்லது நம்பிக்கையுடன் பந்தை வீச முடியவில்லை.

இங்கிலாந்து தொடரை பற்றி பேசி இருக்கும் ஜெய்ஸ்வால் கூறும் பொழுது “கவர் டிரைவ் விளையாட முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் பந்து சரியாக கனெக்ட் ஆகவில்லை. அதைப் பார்த்த ரோகித் பாய் என்னிடம் வந்து ‘இப்பொழுது உனக்கு இது சரியாக செல்லவில்லை. எனவே பந்தை நேராக விளையாடு ‘என்று சொன்னார். அதற்குப் பிறகுதான் நேராக அடித்தேன்.

- Advertisement -

நான் களத்தில் நின்று செட் ஆன பிறகு என்னால் ஆண்டர்சன் பந்துவீச்சை அடிக்க முடியும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆண்டர்சன் என்று மட்டும் கிடையாது, நான் நின்று விட்டால் எந்த பந்துவீச்சாளரையும் என்னால் அடிக்க முடியும். எனவே நான் செட் ஆகியிருந்த நேரத்தில் ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர்களுக்கு அடித்தேன்.

இதையும் படிங்க :ஐபிஎல்-ல் இந்திய வீரர்கள் சம்பளத்தை பார்த்து இங்கிலாந்து வீரர்களுக்கு பொறாமை” – கவாஸ்கர் விமர்சனம்

எங்கள் அணியில் சிலருக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லைதான். ஆனால் எல்லோரும் நீண்ட வருடங்களாக ஐபிஎல் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுகிறார்கள். எனவே பொதுவாக அவர்களுக்கு பின்னால் பெரிய கிரிக்கெட் அனுபவம் இருக்கிறது. எனவே நாங்கள் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் குறைவாய் இருப்பதை பிரச்சினையாகப் பார்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.