இந்திய இளம் அணி இங்கிலாந்து அணியை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்குக்கு ஒன்று என வென்றது, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் பலரையும் பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்பதற்கான மகிழ்ச்சி மட்டுமே இது கிடையாது.
ஏனென்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை, அவர்கள் தங்களையும் தங்களது கிரிக்கெட்டையும் மிகப்பெரியதாகவே பேசி மற்றவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். இதனால் எப்பொழுதும் அவர்களால் இன்னொரு நாட்டின் கிரிக்கெட் மீது குறை சொல்லாமல் இருக்கவே முடியாது. இல்லையென்றால் தங்கள் நாட்டின் கிரிக்கெட் குறித்து பெருமை பேசாமல் இருக்க முடியாது.
இப்படியான நிலையில்தான் பாஸ்பால் என்னும் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புது உயிர் கொடுப்பதாகஅமைந்திருப்பதாகவும், இந்திய அணியை சொந்த மண்ணில் வெல்லுவோம் என்றும், இங்கிலாந்து இந்த முறை இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு வந்தது.
ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணி இந்திய தரப்பே எதிர்பார்க்காத வகையில் அபாரமாக விளையாடி தொடரைப் பெரிய அளவில் வென்று அசத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் அவர்களை பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இங்கிலாந்தை வெல்வது எப்பொழுதுமே தனி மகிழ்ச்சி என அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்தியா வந்த இங்கிலாந்து அணியை இளம் இந்திய அணி அதிரடியாக வென்றதை பார்ப்பதற்கு எவ்வளவு சுவாரசியமாக இருந்தது. இந்த இந்திய அணியை ஒவ்வொரு விமான நிலையத்திலும் இந்திய அதிகாரிகள் அவ்வளவு மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். ஒட்டுமொத்தமாக இந்தத்தொடர் மிகவும் சிறப்பானதாக அமைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியர்கள் எப்பொழுதும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் எங்கு வந்தாலும் அந்த கலாச்சாரத்தோடு கலந்து விடுகிறார்கள். அவர்கள் இந்த நாட்டின் பூர்வீக மக்கள் ஆனா எங்களைப் பார்த்து எப்பொழுதும் பொறாமைப்படுவது கிடையாது. ஐபிஎல் தொடர் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்று அவர்கள் தெரிந்து இருக்கிறார்கள். இதில் ஆஸ்திரேலியா வீரர்கள் மட்டும் இல்லாமல், ஐபிஎல் அணிகளில் பல விதங்களில் பயிற்சியாளர்களாக ஆஸ்திரேலியர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு அணியிலும் நண்பர்களாகவே மாறி விட்டார்கள்.
இதையும் படிங்க : “ஹர்திக்கை டீம்ல சேர்த்து இருப்பேன்.. ஆனா கேப்டன் ஆக்கமாட்டேன்.. மாத்துங்க” – யுவராஜ் சிங் பேச்சு
ஆனால் சில இங்கிலாந்து வீரர்களுக்கு, ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் வாங்கும் சம்பளத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஐபிஎல்-ன் ஏலம் எப்படி செல்லும் என்பதை விளக்கி புரிய வைக்க முடியாது. அது அந்தந்த அணிகளின் தேவையை பொறுத்து அமைகிறது. எனவே இங்கு ஒரு இந்திய வீரர் தன் திறமையை விட அதிக பணத்தையும் பெற முடியும். இதைத்தான் இங்கிலாந்து வீரர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே இதனால்தான் இங்கிலாந்து அணியை தோற்கடிப்பது என்பதில் மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.