டி20 உலககோப்பை.. எதிர் டீம்களுக்கு நாம பிளான் போட ஐபிஎல் சரியான இடம் – ஜெய்ஸ்வால் பேச்சு

0
8
Jaiswal

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு, துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை குறித்து அவர் முக்கியமான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கு அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்கின்ற திடீர் சந்தேகம் உருவானது. காரணம் ஐபிஎல் தொடரில் அவரால் முதல் ஏழு போட்டிகளை பெரிதாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக துவக்க வீரர் இடத்திற்கு திடீர் போட்டி உருவானது போல காணப்பட்டது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து சுதாரித்த ஜெய்ஷ்வால் சதம் மற்றும் அரை சதங்கள் அடித்து மீண்டும் தன்னுடைய சிறப்பான ஃபார்முக்கு வந்திருக்கிறார். மேலும் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் துவக்க வீரர் இடத்திற்கு தேர்வு செய்து இருக்கிறார்கள். பெரும்பாலும் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை குறித்து ஜெய்ஸ்வால் பேசும்பொழுது “டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு ஐபிஎல் தொடர் நூறு சதவீதம் சரியான தளம் என்று நான் நினைக்கிறேன். இங்கு நாம் நிறைய விளையாடலாம், நிறைய கற்றுக் கொள்ளலாம், நிறைய அனுபவத்தை பெறலாம். இந்தியாவில் விளையாடிய விதத்தில் ஐபிஎல் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இங்கு ஐபிஎல் போட்டிக்கு நாம் வேறு வேறு மைதானங்களுக்கு சென்று வேறு வேறு சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது மிகவும் அற்புதமானது.

மேலும் டி20 உலகக்கோப்பையில் நாங்கள் யாருக்கு எதிராக விளையாட போகிறோமோ அவர்களுடன்தான் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அவர்களைப் பற்றி மிக நன்றாக தெரியும். எனவே அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக தயாராக முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் பவுலர்களை காப்பாற்ற.. இந்த ஒரு விஷயத்தையாவது பிசிசிஐ தயவுசெய்து மாத்தனும் – அஸ்வின் கோரிக்கை

நான் என்னுடைய செயல்பாட்டில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். என்னுடைய பயிற்சி நேரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்கிறேன். மற்றும் சரியான நபர்களை உடன் வைத்துக் கொண்டு, மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.