ஐபிஎல்-ல் பவுலர்களை காப்பாற்ற.. இந்த ஒரு விஷயத்தையாவது பிசிசிஐ தயவுசெய்து மாத்தனும் – அஸ்வின் கோரிக்கை

0
44
Ashwin

நடப்பு ஐபிஎல் தொடர் டி20 கிரிக்கெட்டில் பேட்டி அணுகும் விதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருப்பதாக பல முன்னாள் வீரர்களும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். பெரிய சிரமங்களை பந்துவீச்சாளர்கள் சந்தித்து வரும் சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடுகளங்கள் தட்டையாக பேட்டிங் செய்ய சாதகமாகவும், மேலும் பவுண்டரி எல்லைகள் சிறியதாகவும், இத்தோடு இம்பேக்ட் பிளேயர் விதியும் இருக்கின்ற காரணத்தினால், பந்துவீச்சாளர்கள் போட்டியிலிருந்து மொத்தமாக வெளியே வைக்கப்படுகிறார்கள்.

- Advertisement -

மேலும் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கும் கிரிக்கெட், தற்போது இரு அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான போட்டியாக மாறி இருக்கிறது. வெறும் பவுண்டரி சிக்ஸர்கள் அடிப்பது மட்டுமே கிரிக்கெட் என உருமாற்றம் அடைந்திருக்கிறது.

ஒரு பக்கம் பந்துவீச்சாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதோடு, கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய சவால்கள் அளிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக ரசிகர்களுக்கு மிகவும் வலிமையற்ற ஒரு விளையாட்டு காணக் கிடைக்கிறது. எனவே கிரிக்கெட்டை காப்பாற்றும் விதமாக சில மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் “அன்றைய காலகட்டத்திற்கு கட்டப்பட்ட மைதானங்கள் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாது. மேலும் அன்றைய சர்வதேச போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பேட்கள் தெரு கிரிக்கெட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட் பேட்கள் தரமாக இருக்கின்றன. மேலும் விளம்பரதாரர்களின் எல்இடி போர்டுகள் வந்து விட்டதால் பவுண்டரி எல்லைகள் சில கஜம் தூரம் உள்ளே வந்துவிட்டது. இது கிரிக்கெட்டை ஒருபுறமாக சாய்கிறது. எனவே மைதானத்தில் பவுண்டரி எல்லைகளின் நீளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் வாழ்க்கை பாவமானது.. இதை நீங்களே பாருங்களேன் – இயான் பிஷப் வருத்தம்

தற்போது ஐபிஎல் தொடரில் நீங்கள் பந்துவீச்சில் விட்டுக் கொடுக்கப்பட்ட ரண்களின் புள்ளி விவரங்களை பார்த்தால், எங்களுடைய அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறது. நாங்கள் ஜெய்ப்பூர் மைதானத்தில் எடுத்த 180 ரன்கள்தான் மிக அதிகமானது. ஆனால் நாள் முடிவில் ரசிகர்கள் பவுண்டரி சித்தர்களை பார்க்கத்தான் மைதானத்திற்கு வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.