இந்திய கிரிக்கெட்

48 இன்னிங்ஸ்.. அறிமுகத்திலிருந்து ஆட்சி செய்யும் ஜெய்ஸ்வால்.. ஜோ ரூட்டையும் தாண்டி சாதனை

இந்திய டெஸ்ட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து அதிக ரன் எடுத்தவராக ஜோ ரூட்டையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 175 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இது அவருக்கு ஏழாவது சர்வதேச டெஸ்ட் சதமாக அமைந்திருக்கிறது.

அறிமுகமே சாதனை

2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால் முதல்முறையாக இந்திய அணிக்கு அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து 170 ரன்கள் தாண்டி எடுத்து சாதனை படைத்தார். இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் எடுத்திருந்தார்.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய மண்ணில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து அசத்தினார். மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணங்களிலும் சதம் அடித்து, தன்னால் எல்லா இடங்களிலும் சதம் அடிக்க முடியும் என நிருபித்து காட்டியிருக்கிறார்.

- Advertisement -

ஜோ ரூட் தாண்டி சாதனை

இந்த நிலையில் தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து வேறு யாரையும் விட அதிக ரன் எடுத்தவராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் ஜோ ரூட் தன்னுடைய டெஸ்ட் பேட்டிங் பொற்காலத்தில் இருக்கும் நிலையில், அவரையும் தாண்டி சாதித்து இருக்கிறார்.

ஜெயஸ்வால் மொத்தம் 48 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் உடன் 2418 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து ஜோ ரூட் மொத்தம் 44 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் உடன் 2037 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இரட்டை சதம் தவறியது.. ரன் அவுட்டில் கில் மீது தவறா? – மனம் திறந்த ஜெய்ஸ்வால் வெளிப்படைப்பேட்டி

ஜெய்ஸ்வால் – 48 – 2418 – 53.7 – 7/12
ஜோ ரூட் – 44 – 2307 – 57.7 – 9/8
பென் டக்கெட் – 45 – 1835 – 41.7 – 4/9
சுப்மன் கில் – 41 – 1796 – 48.5 – 7/4
ஹாரி புரூக் – 33 – 1792 – 54.3 – 6/8
ஒல்லி போப் – 40 – 1471 – 36.8 – 5/5

- Advertisement -
Published by