அண்டர்-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஆர்யவீர் செவாக் அற்புதமாக விளையாடி சதமடித்தது குறித்து இந்திய முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர செவாக்கின் மகனும், இளம் வீரருமான ஆர்யவீர் செவாக் மனம் திறந்து பேசி உள்ளார்.
இந்த முக்கியமான போட்டியில் அவர் 160 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அந்தப் போட்டியில் தான் பேட்டிங் செய்தபோது தனது கவனத்தை ஒருமுகப்படுத்தப் பின்பற்றிய விசேஷமான ஆன்மீக முறையைப் பற்றி அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆர்யவீர் செவாக் பேசும்போது “என் தந்தை வீரேந்திர செவாக் விளையாடும் போது பிட்ச்சில் நின்றுகொண்டு பாட்டுகள் பாடிக்கொண்டிருப்பார் என்று என்னிடம் கூறியிருக்கிறார். மனதை எதிலும் அலைபாய விடாமல் ஒரே இடத்தில் நிலைநிறுத்த இது போன்ற ஒரு ரீசெட் பட்டன் போன்ற அமைப்பு தேவைப்படுகிறது”
“அதனால் நான் பேட்டிங் செய்யும்போது, மனதுக்குள் தொடர்ந்து ‘சீதா ராம்’ என்று உச்சரித்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் வேறு எந்த விதமான நெகட்டிவ் எண்ணங்களும் என் மூளைக்குள் வராது. பந்து வீசப்படும் போது எனது முழு கவனமும் அந்த பந்தின் மீது மட்டுமே இருக்கும். பந்து எங்கு விழுகிறது என்பதைப் பார்த்தவுடனேயே அதற்குத் தகுந்தபடி என் ஷாட்களை விளையாடுவேன். ரன்கள் அல்லது சதத்தைப் பற்றி யோசிக்காமல் பந்துக்கு ஏற்றவாறு உடனடியாக ரியாக்ட் செய்யவே முயற்சிப்பேன். இதுவே என் இன்னிங்ஸின் ரகசியம்” என்று கூறி இருக்கிறார்.