இந்திய கிரிக்கெட்

கவாஜா அந்த குற்றத்தை வெளிப்படுத்த காரணம்.. காசு சம்பாதிக்கவே.. நேர்மையில்லை – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

​உஸ்மான் கவாஜா தனது சுயசரிதை புத்தகத்தை விற்பனை செய்வதற்காகவே 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய ‘சான்பேப்பர்கேட்’ விவகாரத்தை மீண்டும் கிளறி உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

​ஆஸ்திரேலிய அணியில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவங்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பொதுவெளியில் பேசுவது ரசிகர்களிடையே பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

​இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “உஸ்மான் கவாஜா தனது புத்தகத்தை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகவே எட்டு ஆண்டுகள் பழமையான குறைகளை வெளியில் கொண்டு வந்துள்ளார். உண்மைகள் எப்போதாவது வெளிவர வேண்டும் என்று சிலருக்குத் தோன்றும். இந்த விஷயத்தை அவர் ஓய்வுக்குப் பிறகு ஒரு வீடியோ வெளியிட்டோ அல்லது சமூக வலைத்தள பதிவின் மூலமாகவோ செய்திருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

​மேலும் அவர் பேசும்போது “தனது புத்தகத்தின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். எதிக்ஸ் (ethics) எனப்படும் ஒழுக்க நெறிமுறைகளைப் பணம் ஈட்ட பயன்படுத்தும்போது இது போன்ற கேள்விகள் எழுவது இயல்பானது” எனத் கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by