ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடையே நடைபெற்ற வர்த்தகம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அணிகளுக்கு இடையே வீரர்களை மாற்றிக் கொள்ளும் இந்த வர்த்தக ஒப்பந்தம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “பஞ்சாப் அணியின் கோணத்தில் இருந்து பார்த்தால், ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கப் போவதில்லை. ஆனால் அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். அவர்களிடம் ஏற்கனவே அது போன்ற பல வீரர்கள் உள்ளனர். அணியில் அவரை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவரது பங்களிப்பு இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது “பஞ்சாப் அணியின் உண்மையான பிரச்சனை பேட்டிங் அல்ல. அவர்களுக்கு ஆல்-ரவுண்டர் பற்றாக்குறையும் எப்போதுமே இருந்ததில்லை. அவர்களின் பிரதான பலவீனமாக இருந்தது பவுலிங் மட்டும்தான். அர்ஷ்தீப் சிங் வெளியேறியதால் அந்தப் பகுதி இப்போது இன்னும் பலவீனமாகவே தெரிகிறது. ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த சொத்து என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் பஞ்சாப் அணியின் பவுலிங் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை” எனத் கூறி இருக்கிறார்.