இந்திய கிரிக்கெட்

ஹர்திக் பஞ்சாப் போய் அநியாயமா மாட்டிக்கிட்டாரு.. அதற்கான உண்மை காரணம் இதுதான் – பத்ரிநாத் கருத்து

​மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ள ஹர்திக் பாண்ட்யா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடையேயான பிளேயர் டிரேட் குறித்து இந்திய முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து எஸ்.பத்ரிநாத் பேசும்போது “ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை, இது அவருக்கு ஒரு சிறந்த வின்-வின் சிச்சுவேஷன் கிடையாது. அவர் இனி கேப்டனாக இருக்கப் போவதில்லை. அவர் அணி மாறுவதாக இருந்தால் கேப்டன் பதவி வழங்கப்பட்டால் மட்டுமே மாறும் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இப்போது அவரால் அப்படிச் செய்ய முடியாது, மேலும் அங்கு அவருக்கு எந்த அதிகாரமும் இருக்காது. இது மெகா ஆக்ஷனுக்கு முந்தைய கடைசி ஆண்டாகும். பஞ்சாப் அணி நிச்சயமாக அவரைத் தக்க வைத்துக் கொள்ளும்”

“எனவே அவர் அதே விலை வரம்பில்தான் தக்கவைக்கப்படுவார். ஒருவேளை அவர் ஆக்ஷனுக்குச் சென்றிருந்தால் இன்னும் அதிக விலைக்குப் போயிருக்கக்கூடும். எனவே அவர் அங்கே பணத்தை இழக்க நேரிடும். எனவே இது மும்பை அணிக்கு நல்ல டிரேட், பஞ்சாபுக்கும் நல்ல டிரேட், அர்ஷ்தீப்புக்கும் நல்ல டிரேட், ஆனால் ஹர்திக்கைப் பொறுத்தவரை இது ஒரு சுமாரான டிரேட் மட்டுமே, சூப்பர் டிரேட் அல்ல. இது எனது கருத்து” என்று கூறி இருக்கிறார்.

​பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டராகவும், லோயர் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய வீரராகவும் அணியின் பலத்தை அதிகரிப்பார் என்று பத்ரிநாத் பாராட்டினார். மறுபுறம், அர்ஷ்தீப் சிங் சிறந்த லெஃப்ட்-ஆர்ம் ஃபாஸ்ட் பவுலராக இருப்பதால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்றும், ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியில் விளையாடுவது அர்ஷ்தீப் கனவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -
Published by