இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது நாளில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை ரன் அவுட்டால் இழந்தது குறித்து ஜெய்ஸ்வால் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருக்கிறது.
ஜெய்ஸ்வால் ரன் அவுட்
நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 173 ரன்கள் எடுத்திருந்தார். இன்று மேற்கொண்டு விளையாடி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தவறான புரிதலின் காரணமாக ரன் அவுட் ஆகி இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பந்தை நேராக அடித்து விட்டு ஜெய்ஸ்வால் ஓடிவர கேப்டன் கில் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட ரன் தன்னுடையது எனவும், எனவே தான் அழைத்ததும் கில் வந்திருக்க வேண்டும் எனவும் ஜெய்ஸ்வால் காலத்தில் கோபப்பட்டபடி கூறி சென்றார். இந்த நிலையில் இன்றைய ஆட்ட நாள் முடிவுக்குப் பிறகு இது குறித்து பேசி இருக்கிறார்.
என்னுடைய முடிவு இதுதான்
இது குறித்து ஜெய்ஸ்வால் பேசும்பொழுது “நான் களத்தில் இருந்தால் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் சென்று முடிக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பேன். மேலும் ரன் அவுட் ஆட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடியது. எனவே நான் அப்படி அவுட் ஆனது குறித்து பரவாயில்லை. என்னுடைய தனிப்பட்ட இலக்கு மற்றும் அணியின் மொத்த குறிக்கோள் என்ன என்பது குறித்து நான் விளையாடும் போது சிந்தித்துக் கொண்டிருப்பேன். அதை நோக்கியே எனது பயணம் இருக்கும்”
இதையும் படிங்க : ஜடேஜா விக்கெட் வேட்டை.. ஃபாலோ ஆனை தவிர்க்குமா வெஸ்ட் இண்டீஸ்.. 2வது நாளில் நடந்தது என்ன?
” நான் ஆட்டத்தில் இருந்தால் என்னால் மேற்கொண்டு சிறப்பாக எடுத்துச் செல்ல முடியும் என்று தெரியும். எனவே ஆரம்பத்தில் நான் எனக்கு கொஞ்சம் நேரம் கொடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் பந்து ஸ்விங் ஆகி கொண்டு இருந்தது. பிறகு நான் செட்டில் ஆகியதும் ரன்கள் கொண்டு வர ஆரம்பித்தேன். எனக்கு அது எளிதாக இருந்தது. தற்போதும் ஆடுகளம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை சீக்கிரம் ஆல் அவுட் செய்து, மீண்டும் இன்னொரு முறை ஆல் அவுட் செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.






