“என் ஊர் மைதானம்.. இங்க இத செஞ்சா மட்டும்தான் ஜெயிக்க முடியும்” – ராஜ்கோட் ராஜா ஜடேஜா பேட்டி

0
369
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார சாதனை வெற்றி பெற்றிருக்கிறது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் ரவீந்திர ஜடேஜா மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 33 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. அப்பொழுது ரோகித் சர்மா உடன் இணைந்து இரட்டை சத பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்து 112 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி 445 என்கின்ற நல்ல மொத்தத்தை முதல் இன்னிங்ஸில் பெற்றது.

இதற்கடுத்து பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் இரண்டாவது பகுதியில் கேப்டன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி சரிவை உண்டாக்கினார். மொத்தம் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா களம் இறங்கவில்லை. ஆனால் பந்து வீச்சில் வந்து அபாரமாக செயல்பட்டு 5 விக்கெட்டுகள் கைப்பற்றி, ஒரு நாள் முன்னதாகவே இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

சொந்த மைதானத்தில் விளையாடிய ஜடேஜா முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சதம் அடித்து, மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றி அதோடு மொத்தம் ஏழு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசி ரவீந்திர ஜடேஜா ” நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது ரோகித் சர்மா உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் உருவாக்க நினைத்தேன். மேலும் நான் என்னை நம்பி என்னுடைய ஷாட்டை விளையாட விரும்பினேன். அதே சமயத்தில் இந்த நிலையில் வேற எந்த முயற்சிகளும் செய்ய முடியாது. பந்தைப்பார்த்து விளையாட வேண்டும்.

இந்த விக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். பிறகு இந்த விக்கெட் படிப்படியாக பந்து சுழல ஆரம்பிக்கும். அதே சமயத்தில் இங்கு விக்கெட் கைப்பற்றுவது சாதாரணமாக இருக்காது. நீங்கள் தொடர்ந்து சரியான இடத்தில் பந்து வீச வேண்டும்.

இதையும் படிங்க : “1-2.. இதுல இருந்து ஜெயிக்க எங்களுக்கு தெரியும்.. ஜெயிப்போம்” – பென் ஸ்டோக்ஸ் சவால்

எனவே ரோகித் சர்மா டாஸ் வென்றால் நாங்கள் பேட்டிங் செய்வது என முடிவு செய்திருந்தோம். நாங்கள் விரும்பியபடி டாஸ் எங்களுக்கு அமைந்தது. நாங்கள் சரியான முறையில் விளையாடி வெற்றி பெற்று இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.