“தம்பி சர்பராஸ் நல்லா விளையாடின.. தப்பு என் மேலதான்” – ஜடேஜா சோகமான பதிவு

0
650
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடரை சமநிலையில் வைத்திருக்கின்றன.

இதன் காரணமாக மீதம் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்கின்ற நிலை இருக்கிறது. எனவே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட தொடர் 3 போட்டிகளாக சுருக்கப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங் யூனிட்டில் இடம்பெற முடியாமல் வெளியில் இருக்கிறார்கள். மேலும் பவுலிங் யூனிட்டில் அபாயகரமான முகமது சமியும் காயத்தால் வெளியில் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது போட்டியில் இரண்டு வீரர்கள் அறிமுகமானார்கள். மொத்தமாக சேர்த்து அனுபவம் இல்லாத ஐந்து பேட்ஸ்மேன் கள் இந்திய டெஸ்ட் பேட்டிங் யூனிட்டில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருக்கிறார்கள்.

இப்படியான ஒரு அணியை வைத்து இங்கிலாந்து அணியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் ரோஹித் சர்மா இருக்கிறார்.

- Advertisement -

இந்த நெருக்கடி உடன் வந்து ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து சதம் அடித்து அணியை நல்ல நிலைக்கும் கொண்டு வந்து விட்டார். இதற்கு அடுத்து களத்திற்கு வந்த சர்ப்ராஸ்கான் யாரும் எதிர்பாராத விதத்தில் அதிரடியாக விளையாட, ரோஹித் சர்மா மிக மகிழ்ச்சியில் இருந்தார்.

எப்படியும் முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் எளிமையாக எடுத்து விடலாம் என்று அவர் நினைத்திருந்தபொழுது, ரவீந்திர ஜடேஜாவால் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சர்ப்ராஸ் கான் 62 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதைப் பார்த்து கடுமையாக கோபமடைந்த ரோகித் சர்மா தொப்பியை கழட்டி எறியும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாக வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : “ரன் அவுட் நடந்த பிறகு.. டிரெஸ்ஸிங் ரூமில் ஜடேஜா இதைத்தான் கூறினார்” – சர்ப்ராஸ் கான் தகவல்

இந்த நிலையில் இந்தியா அணிக்காக முதல் போட்டியில் விளையாடும் சர்ப்ராஸ் காலை ரன் அவுட் செய்த வருத்தத்தில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சர்ப்ராஸ் கானுக்கு நடந்தது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நான்தான் தவறாக ரன்னுக்கு அழைத்து விட்டேன். அது என்னுடைய தவறுதான். சர்ப்ராஸ் மிக நன்றாக விளையாடினார்” என்று சோகமாகப் பதிவு செய்திருக்கிறார்.