“ரன் அவுட் நடந்த பிறகு.. டிரெஸ்ஸிங் ரூமில் ஜடேஜா இதைத்தான் கூறினார்” – சர்ப்ராஸ் கான் தகவல்

0
1362
Sarfaraz

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுது, ஜோடி சேர்த்து இரட்டை சதபார்ட்னர்ஷிப் அமைத்து, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரும் இந்திய அணியை காப்பாற்றினார்கள்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா முதலில் சதம் அடித்து ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். அதே சமயத்தில் அவருடன் இணைந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இவர்கள் இருவரும் பேச்சு பொருளாக மாறி இருக்க வேண்டும். ஆனால் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலமாக, சர்வதேச அறிமுகத்தின் முதல் போட்டியிலேயே எல்லோருடைய பேசுபொருளாகவும் சர்ப்ராஸ் கான் மாறி இருக்கிறார்.

அதே சமயத்தில் துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜா அழைப்பிற்காக ஓடி சர்ப்ராஸ் கான் ரன் அவுட் ஆகிவிட்டார். இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வேறு விதமாக பேசுபொருளாக மாறிவிட்டார்.

- Advertisement -

தற்பொழுது இந்த ரன் அவுட் குறித்து பேசி உள்ள சர்பராஸ் கான் கூறும் பொழுது “சில நேரங்களில் வீரர்கள் தங்களுக்குள் தகவல் தொடர்பில் சிலர் புரிதல் இல்லாமல் தவறுகள் செய்கிறார்கள். இதெல்லாம் கிரிக்கெட்டில் மிகவும் சகஜமான ஒன்று. இது விளையாட்டின் ஒரு பகுதிதான்.

பேட்டிங் செய்யும் பொழுது எப்பொழுதும் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே நான் ஜடேஜா பாய் இடம் ஆட்டத்தின் நடுவில் பேசிக்கொள்ள கேட்டேன். அவர் எனக்கு இன்று முழுவதும் மிக ஆதரவாக களத்தில் இருந்தார். என்னுடன் பேசிக் கொண்டே இருந்தார். மேலும் மதிய உணவு இடைவேளையின் போது வந்தவர் என்னுடன் பேச செய்தார்.

இதையும் படிங்க : “சர்பராஸ் கானுக்கு பயமே கிடையாது.. ஸ்டோக்ஸ்க்கு அசரவே இல்ல” – இங்கிலாந்து கோச் பால் காலிங்வுட் பேச்சு

இதற்குப் பிறகு இன்றைய ஆட்ட நாள் முடிவில் ட்ரெஸ்ஸிங் ரூம் வந்த ஜடேஜா பாய் என்னிடம் தகவல் தொடர்பில் கொஞ்சம் தவறு நடந்து விட்டது. ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்.