நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ரவீந்திர ஜடேஜா ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் வெற்றி இலக்கினை நோக்கி சென்னை அணி விளையாடியது.
வெற்றி பெறும் முனைப்பில் இருந்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், அதற்குப் பிறகு வந்த டாரி மிச்சல் மற்றும் ருத்ராஜ் ஆகியோர் சிறப்பாக பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் எதிர்பாராத விதமாக டேரி மிச்சல் ஆட்டமிழக்க அதற்குப் பிறகு சிவம் துபே அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த போது ஆட்டம் இழந்தார்.
கடந்த சீசன்களில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் யாராவது ஆட்டம் இழந்தால் சிஎஸ்கே ரசிகர்கள் உடனடியாக மகேந்திர சிங் தோனி களத்தில் இறங்க வேண்டும் என்று மைதானத்தில் கரகோஷங்களை எழுப்புவார்கள். இதில் முக்கியமாக பாதிக்கப்பட்ட வீரர் சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. பெரும்பாலும் மகேந்திர சிங் தோனி ஜடேஜா ஆட்டம் இழந்த பிறகு களம் இறங்குவார் என்பதால் அவரை விரைவாக ஆட்டமிழக்க செய்ய ரசிகர்கள் கூச்சலிடுவார்கள்.
சிஎஸ்கே ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா
இதனை ரவீந்திர ஜடேஜா தனது சமூக வலைதளத்தில், இதுகுறித்து சற்று கோபமான பதிவினை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை நினைவுபடுத்தும் விதமாக நேற்று சிவம் தூபே ஆட்டம் இழந்த பிறகு தோனி களம் இறங்குவார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு, மைதானத்திற்குள் நுழைய முயலுவது போல சென்று பின்னர் திரும்பவும் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு உள்ளே சென்று விடுவார். இதனைப் பார்த்த சக சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கமே அதிர்ந்தது.
சிறிது நேரத்தில் ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா, அவர் உள்ளே சென்றதும் வெளியே வரும் மகேந்திர சிங் தோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர். இதனை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது இப்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
இதையும் படிங்க:வீடியோ.. 125 டெசிபல் சத்தம்.. தாங்க முடியாமல் காதை பொத்திய ரசல்.. தல தோனியின் மாஸ் ஸ்வாக்
ஆனால் இதே ரவீந்திர ஜடேஜாதான் கடந்த சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்று நிலையில் மோகித் சர்மாவின் ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்தும் இரண்டாவது பந்தில் பௌண்டரி விளாசியும் சென்னை அணியை வெற்றி பெற வைத்து ஐந்தாவது கோப்பையை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், ஜடேஜாவிடம் மன்னிப்பும் கேட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jadeja teased the crowd by walking ahead of Dhoni as a joke. This team man🤣💛 pic.twitter.com/Kiostqzgma
— 𝐒𝐞𝐫𝐠𝐢𝐨 (@SergioCSKK) April 8, 2024