வீடியோ.. 125 டெசிபல் சத்தம்.. தாங்க முடியாமல் காதை பொத்திய ரசல்.. தல தோனியின் மாஸ் ஸ்வாக்

0
15983
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் 22 ஆவது தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வி அடையாத அணியாக இருந்த கேகேஆர் அணிக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி கேள்வி வித்தியாசத்தில் வெற்றி பெற்று கேகேஆர் அணியின் வெற்றிப் பயணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரையில் டாஸ் வெல்லாத சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்து வீசுவது என அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு பவர் பிளேவில் 56 ரன்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு கிடைத்தது. எனவே அந்த அணி மிக எளிதாக 200 ரன் களை தாண்டும் என்று கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் பேசினார்கள்.

- Advertisement -

அதற்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா கைக்கு பந்து வர ஆட்டம் ஒட்டுமொத்தமாக மாறியது. கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தட்டுத்தடுமாறி 32 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். ஜடேஜா நான்கு ஓவரில் 18 ரன்கள் என மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு கேப்டன் ருதுராஜ் அரைசதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்த நிலையில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்ட பொழுது சிவம் துபே 28 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்பொழுது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேட்டிங் செய்ய தல தோனி களத்திற்குள் உள்ளே வந்தார்.

தோனி உள்ளே வந்த பொழுது எழுந்த சத்தத்தின் அளவு 125 டெசிபல் இருந்தது. சொந்த மைதானம் என்கின்ற காரணத்தினால் ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் பிடித்தது. இந்த நேரத்தில் பவுண்டரி எல்லையில் பில்டிங் நின்ற கேகேஆர் அணி என்ற ரசல் ரசிகர்களின் ஆரவாரத்தின் சத்தத்தை கேட்க முடியாமல் காதை பொத்திக் கொண்டார். அந்த அளவிற்கு சத்தம் காதை பிளந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல்: சிஎஸ்கே ரன் ரேட் உயர்வு.. ஆர்சிபி சோகம்.. பஞ்சாப் சன்ரைசர்ஸ் போட்டியால் நடக்கப் போகும் ட்விஸ்ட்

இந்த போட்டியில் தோனி ஆட்டம் இழக்காமல் மூன்று பந்துகளில் 1 ரன் எடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிராக ஹைதராபாத் மைதானத்தில் கடைசியாக சிஎஸ்கே அணி விளையாடிய போட்டியில், தோனி உள்ளே வந்த பொழுது எழுந்த சத்தத்தை போல, தன் வாழ்நாளில் அந்த அளவு சத்தத்தை கேட்டதில்லை என பாட் கம்மின்ஸ் கூறி இருந்தது. குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்றைய போட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தது.