தோனி இனிமே இப்படி பண்ணாதிங்க.. மிட்சல் சர்வதேச பேட்ஸ்மேன்.. இது டீம் ஸ்போர்ட்ஸ் – இர்பான் பதான் விமர்சனம்

0
1303
Irfan

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்கு 16வது ஓவரில் பேட்டிங் செய்ய வர வேண்டும் என்றும், மேலும் ஜடேஜா மற்றும் டேரில் மிச்சல் போன்ற சர்வதேச வீரர்கள் கடைசி ஓவர்களில் பேட்டிங்கில் இருந்தால் அவர்களை பேட்டிங் செய்ய தோனி அனுமதிக்க வேண்டும் என இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தோனி டேரில் மிட்சலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் இது தெரியாத மிட்சல் ஒரு ரன்னுக்கு ஓடிவந்து, பின்பு தோனியால் திருப்பி அனுப்பப்பட்டது தற்பொழுது பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் தோனி வேகப் பந்துவீச்சாளர்களை கடைசி ஓவர்களில் மிகச் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வருகிறார். எனவே கடைசி ஓவரை முழுமையாக அவரே விளையாட நினைத்திருக்கிறார். ஆனால் டேரில் மிட்சல் ஓடி வந்தது பலரையும் விமர்சனத்தை நோக்கி தள்ளி விட்டது எனக் கூறலாம்.

இந்த நிலையில் இதுபற்றி இர்பான் பதான் கூறும் பொழுது “நிச்சயமாக தோனி அப்படி செய்திருக்கக் கூடாது. இது ஒரு டீம் விளையாட்டு. டீம் கேமில் இப்படியானதை செய்யாதீர்கள். அவர் ஒரு சர்வதேச பேட்ஸ்மேன். அவர் ஒரு பந்துவீச்சாளராக இருந்திருந்தால் தோனி செய்ததை என்னால் புரிந்து கொண்டிருக்க முடியும். நீங்கள் இதையே ஜடேஜாவிடமும் செய்கிறீர்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்ய வேண்டாம்.

மேலும் தோனி 16வது ஓவரில் வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் இன்னிங்சின் ஆரம்பத்திலேயே அவுட் ஆகி விடுவதை விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்யும்பொழுது 16வது ஓவருக்கு பேட்டிங் செய்ய வந்தால், ஸ்கோரிங் செய்வதற்கு அவருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும் அணி இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது அணியை வெற்றி பெற வைக்கவும் முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயரில் மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே.. கேப்டன்சியில் ருதுராஜ் செய்த தவறுகள்.. ரசிகர்கள் வருத்தம்

இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்றால், ரசிகர்களும் அவர் விளையாடுவதை பார்க்க விரும்புகிறார்கள். அவரது உடல் தகுதியை பார்க்கும் பொழுது, அவர் தொடர்ந்து விளையாடலாம் என்று கூட நான் நினைக்கிறேன். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது” என்று கூறியிருக்கிறார்.