இம்பேக்ட் பிளேயரில் மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே.. கேப்டன்சியில் ருதுராஜ் செய்த தவறுகள்.. ரசிகர்கள் வருத்தம்

0
1582
Ruturaj

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி சில புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க தவறு இருக்கிறது. குறிப்பாக இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்தியது பலராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கேப்டனாகவும் ருதுராஜ் சில தவறுகளை செய்திருந்தார்.

நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் என்று பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 55 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. இதற்கு அடுத்து வந்த பஞ்சாப் ஸ்பின்னர்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அப்படியே தலைகீழாக மாற்றினார்கள்.

- Advertisement -

ஹர்பரித் பிரார் பந்துவீச்சில் ரகானே ஆட்டம் இழந்தார், இதற்கு அடுத்து உள்ளே வந்த சிவம் துபேவை முதல் பந்திலேயே வீழ்த்தினார். இந்த நேரத்தில் டேரில் மிட்சல் அல்லது மொயின் அலியை அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சிவம் துபே இடத்திலேயே டேரில் மிட்சல் வரலாம் என்று நினைத்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவை அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார்கள். அவரை ராகுல் சகர் வெளியேற்றினார்.

இந்த நிலையில் தடுமாறிய சிஎஸ்கே டேரில் மிட்சலை மீண்டும் விட்டுவிட்டு இம்பேக்ட் பிளேயராக வெளியே வைத்திருந்த சமீர் ரிஸ்வியை உள்ளே கொண்டு வந்தது. கடந்த போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக டேரில் மிட்சல் அரைசதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சிஎஸ்கே அணிக்கு பந்துவீச்சில் பெரிய பிரச்சனையை அடுத்த கட்டத்தில் உருவாக்கியது.

டேரில் மிட்சலை முன்கூட்டியே அனுப்பி இருந்தால், சமீர் ரிஸ்வி வந்து விளையாட வேண்டிய சூழ்நிலை இல்லாமல் இருந்தால், ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் பந்துவீச்சில் பனிப்பொழிவு இருந்த நேரத்தில், ஜடேஜா, மொயின் அலி போன்ற விரல் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக, பிரசாந்த் சோலங்கி போன்ற மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் சிஎஸ்கே இப்படியான திட்டங்களை முதலில் யோசிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இதையும் படிங்க: தோனிக்கு 19வது ஓவருக்கு முன்ன சாம்கரன் என்கிட்ட இதை சொன்னார்.. ரொம்ப தைரியமான பையன் – ரூசோவ் பேட்டி

மேலும் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், பந்து பெரிய அளவில் ஈரமாவதற்கு முன்னால், பவர் பிளேவிலேயே எடுத்ததும் ரவீந்திர ஜடேஜாவை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதை சிஎஸ்கே கேப்டன் செய்யவில்லை. இம்பேக்ட் பிளேயர், பேட்டிங் வரிசை, பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது என பல விஷயங்களில் நேற்று சிஎஸ்கே அணியும் கேப்டனும் தவறு செய்தார்கள். இது அந்த அணியின் வெற்றியை மிகக் கடுமையாகப் பாதித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.