“பும்ரா மாதிரி பவுலர பார்த்ததே இல்லை.. இதயத்தையே நொறுக்கிட்டாரு” – அலைஸ்டர் குக் பாராட்டு

0
496
Cook

இந்தியா அணிக்கு ஒற்றை ஆளாக ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு கௌரவமான ஸ்கோரை கொண்டு வந்தார். ஆனாலும் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 396 என்ற ரன்களும் குறைவாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரை முற்றிலுமாக சீர்குலைத்து, பந்துவீச்சில் தனி ஒரு வீரராக போட்டியை இந்தியா பக்கம் கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் 114 ரன்களுக்கு இங்கிலாந்து தனது தொடக்க ஜோடியை இழந்து இரண்டு விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்திருந்தது. இந்த இடத்தில் கடந்த ஆட்டத்தின் நாயகன் போப் மற்றும் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இருவரும் களத்தில் நின்றார்கள்.

இங்கிலாந்து தன்னுடைய அதிரடியான பாணியில் மேற்கொண்டு பெரிய அளவில் ரன்களை குவிப்பதற்கு தயாராக இருந்தது. ஜோ ரூட் வந்த இரண்டாவது வந்தே ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடினார். போப் அதற்குள் செட்டில் ஆகி இருந்தால்.

இப்படியான நிலையில் தான் தன்னுடைய அபாரமான பந்துவீச்சு திறமையினால் ஜோ ரூட் மற்றும் போப் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு பெரிய கதவை பும்ரா திறந்து விட்டார்.

- Advertisement -

இதற்கடுத்து அவரே ஜானி பேஸ்ட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் பக்கமாக இந்த போட்டியை கொண்டு வந்தார். இதற்கு பேட்டிங்கில் கீழ்வரிசையில் டாம் ஹார்ட்லி மற்றும் ஆண்டர்சன் விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற முக்கிய காரணமாக ஆறு விக்கெட் கைப்பற்றி பும்ரா இருந்தார்.

பும்ரா பந்துவீச்சு குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் “பும்ரா என்று இந்திய அணியை வழிநடத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். இங்கிலாந்து அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களை வைத்து சிறப்பாக துவங்கியது. ஜாக் கிரவுலி 76 ரன்கள் சிறப்பாக விளையாடி எடுத்தார். அவர் முதல் முறையாக இறங்கி வந்து விளையாடி லீடிங் எட்ஜ் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த இடத்தில்தான் ஆட்டம் மாறியது. பும்ரா போட்டியில் குதித்து இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையின் இதயத்தை கிழித்து எறிந்தார். இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அவரிடம் வீழ்ந்தார்கள்.

இதையும் படிங்க : “சச்சின் செய்ய முடியாததை.. ஜெய்ஸ்வால் செய்திருக்கிறார்” – பார்த்திவ் படேல் பேச்சு

என்னால் பும்ராவை எதிர்கொள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவருடைய பந்துவீச்சு ஆக்சன் மற்றும் வித்தியாசமான பந்தின் கோணம் போன்றவற்றால் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமத்தை உண்டாக்குகிறார். சில நேரங்களில் அவரது பந்தை விளையாட முடியாத அளவுக்கு போகிறது” என்று கூறியிருக்கிறார்.