தோனி டேரில் மிட்சலுக்கு செஞ்சது தவறு.. அவர் என்ன கடைசி பேட்ஸ்மேனா? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
270
Dhoni

சிஎஸ்கே அணி பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று தங்கள் சொந்த மைதானத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்கில் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி சிங்கிள் ரன் எடுக்காமல் டேரில் மிட்சலை திருப்பி அனுப்பியது குறித்து ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மொத்தம் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை முழுமையாக சந்தித்த தோனி ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார். அதே சமயத்தில் முழுமையான பேட்ஸ்மேன் மிட்சலுக்கு சிங்கிள் எடுக்க மறுத்துவிட்டார். அவர் ஓடி வந்த பொழுது திருப்பி அனுப்பினார். இது தற்போது பலராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நேற்று பேட்டிங் செய்வதற்கு மிட்சல் முன்கூட்டியே அனுப்பப்படவில்லை. சிஎஸ்கே என்ன செய்ய நினைக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் சீக்கிரத்தில் இம்பேக்ட் பிளேயர் சமிர் ரிஸ்வியை உள்ளே கொண்டு வந்தார்கள். ஆனால் கடந்த போட்டியில் அரை சதம் அடித்திருந்த டேரில் மிட்சல் உள்ளே வரவில்லை. மேலும் அவரை பந்து வீச வைக்கவும் இல்லை.

கடைசியில் தோனி அவருக்கு ஒரு சிங்கிள் ரன் எடுக்கவும் மறுத்து விட்டார். தோனி அப்பொழுது முஸ்தஃபீஸூருடன் பேட்டிங் செய்யவில்லை. ஒரு முழுமையான பேட்ஸ்மேன் உடன் பேட்டிங் செய்தார். அவர் அவருக்கு சிங்கிள் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். பிறகு ஒரு சிக்சர் அடித்தார். ஆனாலும் அது போதுமானதாக இல்லை.

- Advertisement -

இங்கு நீங்கள் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்தீர்கள். வழக்கம் போல் சென்னை எக்ஸ்பிரஸ் மிக மெதுவாகத்தான் கிளம்பியது. ஆனால் விக்கெட் இழப்பில்லாமல் பவர் பிளேவில் 55 ரன்கள் எடுத்தது. பவர் விளைவுக்குப் பிறகு ரகானே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : நிறுத்துங்க இதெல்லாம் ரொம்ப ஓவர்.. தீபக் சாஹர் மீண்டும் காயம்.. ரசிகர்களுக்கு அவரின் அக்கா பதிலடி

ரகானே 62 ரன்கள் எடுத்தார் ஆனால் அவருடைய இன்னிங்ஸ் நீளமாக செல்லவில்லை. பவுண்டரியே அடிக்காமல் 52 பந்துகள் விளையாடினார்கள். அந்த நேரத்தில் வீசப்பட்ட எட்டு ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை நான்கு விக்கெட்டுகள் விடப்பட்டது. பின்பு 19ஆவது ஓவருக்கு தோனிக்கு ஸ்பின்னரை கொண்டு வந்தது மிகச்சிறப்பான முடிவாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -