“சச்சின் செய்ய முடியாததை.. ஜெய்ஸ்வால் செய்திருக்கிறார்” – பார்த்திவ் படேல் பேச்சு

0
195
Sachin

இந்திய கிரிக்கெட்டில் திடீரென இடதுகை பேட்ஸ்மன்களுக்கு ஒரு பெரிய வறட்சி உண்டானது. இதனால் எதிரணிகள் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு எதிராக திட்டமிடுவது எளிதான ஒன்றாக இருந்தது.

மேலும் ஒரு அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் பொழுது, இடதுகை மற்றும் வலது கை காம்பினேஷன் அமைத்தால், எதிரணி பேட்ஸ்மேன் சீக்கிரத்தில் செட்டில் ஆகமுடியாது. இருவருக்கும் மாற்றி மாற்றி பந்து வீசும் பொழுது அவர்களுடைய லைன் மற்றும் லென்த் பாதிக்கப்படும்.

- Advertisement -

மேலும் இப்படியான காம்பினேஷனை அமைத்து பேட்டிங் செய்யும்பொழுது, எதிரணி எந்த மாதிரியான சுழல் பந்துவீச்சை கொண்டு வந்தாலும், இருவரில் ஒருவர் தாக்கி விளையாட முடியும்.

இதுமட்டும் இல்லாமல் புதிய பந்தில் துவக்க ஜோடிகளுக்கு எப்பொழுதும் நெருக்கடி இருக்கும். எனவே மிக முக்கியமாக துவக்க இடத்தில் இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இப்படியான நிலையில்தான் இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். தற்போது அவருடைய ஆறாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை இங்கிலாந்துக்கு எதிராக பதிவு செய்துவிட்டார்.

- Advertisement -

குறிப்பாக இவருக்கு பேட்டிங் திறமை மட்டும் இல்லாமல், ஆடுகளத்தைக் கணிப்பது, எந்த பந்துவீச்சாளரை அடிக்காமல் விடுவது, அடிப்பது என அபாரமான கிரிக்கெட் அறிவு இருக்கிறது. இதன் காரணமாகவே இவர் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடக் கூடிய வீரராகப் பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில் இவர் குறித்து இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கூறும் பொழுது ” ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் அவர் விளக்குகளை பார்த்தார். அங்கு கைத்தட்டல்களை பெற நினைத்தார். அதேபோல்அந்த மைதானத்தில் ஐபிஎல் தொடரில் சதமும் அடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது வேறு.

இதையும் படிங்க : சாய் சுதர்சன் சதம்.. இந்திய அணியில் சான்ஸ் கிடைக்குமா?.. இங்கிலாந்து லயன்ஸ் போராட்டம்

அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்தார். தற்பொழுது அவர் இரட்டை சதத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். சச்சின் பாஜி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரட்டை சதத்தை அடிக்க நிறைய காலம் எடுத்துக் கொண்டார். ஆனால் ஜெய்ஸ்வால் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அதைச் செய்துவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.