“இது பாஸ்பால் கிடையாது அதுக்கும் மேல” – இங்கிலாந்து அணியை சீண்டி இந்தியாவை பாராட்டிய ஏபி டிவில்லியர்ஸ்

0
1751
Jaiswal

நேற்று இரவு வரை இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மீது இருந்த மொத்த எதிர்பார்ப்பையும் இந்திய பந்துவீச்சாளர்களும், இந்திய இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலும் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

அதிரடியாக விளையாடும் கிரிக்கெட் பிராண்டை டெஸ்ட் கிரிக்கெட் கொண்டு வந்து இங்கிலாந்து சில காலமாக பாஸ்பால் என்ற பெயரில் வேகமாக விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்தில் பேட்டிங் செய்வதற்கு தட்டையான ஆடுகளத்தில் இங்கிலாந்தின் இந்த அதிரடி அணுகுமுறையை எந்த அணிகளாலும் சமாளிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஏதாவது ஒரு கட்டத்தில் உளவியல் ரீதியாக இங்கிலாந்தின் அதிரடி பின்தங்க வைத்துவிடும்.

எனவே இதன் காரணமாக இங்கிலாந்து விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் பிராண்ட்க்கு உலகம் தழுவி கணிசமாக ரசிகர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்தின் இந்த அணுகு முறையால் வரவேற்பு கிடைத்தது நல்ல விஷயமாக வெளியில் பார்க்கப்பட்டது.

அதே சமயத்தில் சில முக்கியமான வீரர்கள் இந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறை மீது தங்களது விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள். அதில் ஏபிடிவில்லியர்ஸ் எப்பொழுதும் இருந்திருக்கிறார். ஏனென்றால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒரே கியரில் விளையாட முடியாது என நம்புகிறார். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாற்றி அமைத்துக் கொள்ளாமல் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட முடியாது என தொடர்ந்து கூறி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இந்தியா விளையாடி இருக்கும் வரை அவரை வெகுவாக மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆனால் இந்தியா அதிரடியாக விளையாட வேண்டும் என்று குருட்டுத்தனமாக விளையாடவில்லை என்று அவர் கருதுகிறார். இந்தியாவை வைத்து இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறையையும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்தியா தனது இன்னிங்ஸை துவங்கும் பொழுது ஓவருக்கு 8 முதல் 9 ரன்கள் அடித்தார்கள். இதை நீங்கள் பிரேவ், போல்ட், பாஸ்பால் என்றெல்லாம் அழைக்க வேண்டியது கிடையாது. அது உண்மையில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடப்பட்டது.

இதையும் படிங்க : “இந்தியா இப்படி விளையாடும்னு நாங்க எதிர்பார்க்கல.. ஜெய்ஸ்வால் அசத்திட்டார்” – பென் டக்கெட் பேட்டி

நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் தருணங்களை அடையாளம் கண்டு முன்னேற வேண்டும். மொமெண்டம் மாறும்பொழுது மீண்டும் அதற்காக காத்திருந்து, அதற்கேற்றபடி மாற்றியமைந்து மீண்டும் மொமண்டத்தை உருவாக்க வேண்டும்.

நீங்கள் விளையாட்டின் வெவ்வேறு தருணங்கள் மற்றும் அதனுடைய வேக மாற்றங்களை மதிக்கவில்லை என்றால், நீங்கள் எந்த வடிவ கிரிக்கெட் விளையாடினாலும் சரி அது உங்களை கடித்து விடும்” என்று கூறி இருக்கிறார்.