“இந்தியா இப்படி விளையாடும்னு நாங்க எதிர்பார்க்கல.. ஜெய்ஸ்வால் அசத்திட்டார்” – பென் டக்கெட் பேட்டி

0
883
Jaiswal

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்று வந்து வீச்சு மற்றும் பேட்டி என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. மேலும் பீல்டிங்கிலும் பெரிதாக எந்த தவறுகளையும் செய்யவில்லை.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணியை, 246 ரன்கள் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினார்கள். சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 23 ஓவர்களில் இன்று ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி முடித்திருக்கிறது. 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் தற்பொழுது களத்தில் இருக்கிறார்.

சில காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகி வரும் இங்கிலாந்திடம், அவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு இந்திய அணி பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் அச்சமின்றி விளையாடுகிறார். இவருடைய தாக்குதல் பாணி குறித்து இந்திய வீரர் அஸ்வின் இன்று மிகவும் பாராட்டி பேசி இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டும் ஜெய்ஸ்வால் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது “இன்று நாங்கள் மூன்று முதல் நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்தால் நிலைமைகள் வேறு மாதிரி இருந்திருக்கும். அது வித்தியாசமான ஒன்றாக அமைந்திருக்கும். மேலும் இந்தியா பாசிட்டிவாக பேட்டிங்கில் விளையாடியது நன்றாக இருந்தது.

இவர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் நினைத்ததை விட ஸ்டோக்ஸ் அதிக ரன்கள் எடுத்தார். அந்த இடத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இறுதியில் இந்தியா நன்றாகவும் பாசிட்டிவாகவும் விளையாடி முடித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : U19 உலககோப்பை.. இந்திய வீரர் தம்பி அதிரடி சதம்.. 7பேர் ஒற்றை இலக்கம்.. அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா பிரம்மாண்ட வெற்றி

ஜெய்ஸ்வால் மிகவும் அழகாக விளையாடினார். அவர்கள் சொந்த சூழ்நிலையில் சிறப்பாக விளையாடுவதை விட நாம் அவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அதே சமயத்தில் ரோகித் விக்கெட்டை நாங்கள் எடுக்கும் பொழுது இருவருமே செட் ஆகித்தான் இருந்தார்கள்.

நாங்கள் நாளை ஆரம்பத்தில் மூன்று முதல் நான்கு விக்கெட்டுகளை எடுத்தால், அவர்கள் எங்களை விட ரன்னில் பின்தங்கியோ அல்லது கொஞ்சம் முன்னிலை பெற்றாலோ போட்டியில் எங்களால் தொடர்ந்து நீடிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.