“கில் ஜெய்ஸ்வாலை நினைச்சா கஷ்டமா இருக்கு.. நீங்களே பார்த்து பண்ணுங்க” – நியூசிலாந்து லெஜன்ட் பேச்சு

0
641
Gill

இந்தியாவில் டெஸ்ட்தொடர் நடத்தப்படுகிறது என்றால் முதலில் ஆடுகளம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்து விடும். இந்திய சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் மீதான விவாதங்கள் அடுத்து குற்றச்சாட்டாக மாறிவிடும்.

குறிப்பாக ஆசியா தாண்டி இந்தியாவிற்கு விளையாட வரும் நாடுகள் இந்திய மைதானங்களை குறை சொல்லாமல் கிளம்பியது கிடையாது. இதை அவர்கள் காலம் காலமாக செய்து கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

கடந்த முறை ஆஸ்திரேலியா இங்கு வந்த பொழுது, அவர்கள் விளையாட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்திய ஆடுகளங்களை பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பதில் பெயர்போன இங்கிலாந்து இந்த முறை மோசமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து இதற்கு அப்படியே எதிராக நடந்து கொண்டிருக்கிறது. இது எல்லோருக்கும் இந்த முறை சற்று ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய ஆடுகளங்கள் குறித்தும் இந்திய இளம் வீரர்கள் குறித்தும் பேசி உள்ள நியூசிலாந்தின் சைமன் டால் பேசும்பொழுது ” நான் இந்திய ஆடுகளங்களை பற்றி குறை சொல்ல மாட்டேன். காரணம் நியூசிலாந்தில் 15- 16 மில்லி மீட்டர் புற்கள் ஆடுகளத்தில் இருக்கின்றன. இதனால்தான் அவர்கள் உள்நாட்டில் வெற்றி பெறுகிறார்கள். எனவே இந்தியாவும் தமக்கு சாதகமானதை செய்யலாம். ஆனால் அந்த வகையில் மிக மோசமான ஆடுகளங்கள் அமைக்கப்படாத வரையில் எல்லாம் சரிதான்.

- Advertisement -

எனக்கு இந்த விஷயத்தில் இந்திய இளம் வீரர்கள் கில் மற்றும் ஜெய்ஸ்வால் குறித்து கவலையாக இருக்கிறது. இவர்கள் எப்படி உள்நாட்டில் விளையாடி இரட்டை சதங்கள் எடுப்பார்கள்? இது சச்சின், டிராவிட், லட்சுமணன், சேவாக் போன்றவர்கள் சரியான ஆடுகளங்களில் விளையாடி இதைச் சாதித்தார்கள். ஆனால் இந்த இளம் வீரர்களுக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைக்காது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : “விராட் கோலி இடத்திற்கு யார்?.. ரகானே புஜாராவா?” – கேப்டன் ரோகித் சர்மா பளிச் பதில்

மேலும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அதிரடி முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அது பார்க்க நல்ல சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் எனக்கு பிடிக்காது. ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் அதை வைத்து ஆச்சரியப்படுத்தி வெல்லலாம். ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இந்த முறையில் விளையாடி வெல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.