“விராட் கோலி இடத்திற்கு யார்?.. ரகானே புஜாராவா?” – கேப்டன் ரோகித் சர்மா பளிச் பதில்

0
152
Rohit

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.

பெரிய இரண்டு அணிகள் மெகா டெஸ்ட் தொடரில் மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால், தற்பொழுது நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் விராட் கோலி, ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், ரோஹித் சர்மா, அஸ்வின், ஜோ ரூட் போன்ற பெரிய வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால், இந்தத் தொடர் குறித்து ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படியான நேரத்தில் விராட் கோலி தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.

எனவே இதன் காரணமாக அவருடைய இடத்திற்கு யாரை கொண்டு வருவார்கள் என்பதும் தற்பொழுது சுவாரசியமான எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது. ஆனால் அணி நிர்வாகம் இதுவரை விராட் கோலி இடத்திற்கு யாரையும் அறிவிக்கவில்லை.

- Advertisement -

சீனியர் வீரர்களில் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் விராட் கோலி இடத்திற்கு இருக்கிறார்கள். இளம் வீரர்களில் ரிங்கு சிங், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இருக்கிறார்கள்.

இது மட்டுமில்லாமல் இந்த தொடரில் 22 வயதான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி இடத்திற்கு யாரை தேர்வு செய்வார்கள்? இளம் வீரர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்களா? என்பது குறித்தான கேள்விகளுக்கு ரோகித் சர்மா பதில் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது ” நாங்கள் விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு சீனியர் வீரர்களிடம் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால் தற்போது அந்த இடத்திற்கு இளம் வீரர்களில் யாருக்காவது வாய்ப்பு கொடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம்.

இதையும் படிங்க : “14 வயசுல உருவான சபதம்.. விராட் பாய்யை இப்படி பார்க்கிறது பெரிய மகிழ்ச்சி” – கில் பேச்சு

சில நேரங்களில் சில வீரர்களை அவர்களுக்கு நன்கு பழக்கப்பட்ட சூழ்நிலைகளில் அறிமுகப்படுத்த வேண்டும். இப்படியான இளம் வீரர்களை நாங்கள் வெளிநாட்டு தொடர்களில் அறிமுகப்படுத்த விரும்பவில்லை. எனவே இந்த தொடரில் வாய்ப்பு கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.