சூர்யா பும்ரா என் கூட இருக்கிறது பாக்கியம்.. இன்னைக்கு பேசி வைக்காமயே ஒரு வேலையை செஞ்சோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
152
Hardik

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் தோல்வியடைந்தது. இதற்கு அடுத்து சொந்த மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக முதல் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக இலக்கைத் துரத்தி 15.3 ஓவரில் 199 ரங்கன் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு இசான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்கள், சூரியகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி வெகு எளிதாக ஆர்சிபி அணியை வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி விட்டார்கள்.

- Advertisement -

மேலும் இன்றைய போட்டியில் பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மூன்று சிக்ஸர்கள் உடன் 6 பந்துகளில் 21 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் வேகமாக இலக்கை எட்டி வெற்றி பெற்று, தங்களது ரன் ரேட்டையும் புத்திசாலித்தனமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “வெற்றி பெறுவது எப்பொழுதுமே நன்றாக இருக்கும். அதே சமயத்தில் நாங்கள் வெற்றி பெற்ற விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இந்த போட்டியில் தேவைப்படும் பொழுது பந்துவீச்சில் கூடுதலாக ஒருவரை பயன்படுத்த இம்பேக்ட் பிளேயரும் இருந்தார். இது எனக்கு இன்னும் வசதியாக அமைந்தது. மேலும் குறிப்பிட்ட நாளில் ஏதாவது ஒரு பவுலருக்கு சரியாக அமையாவிட்டால், அவருக்கு பதிலாக நாம் இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்தலாம்.

ரோகித் மற்றும் இசான் கிஷான் நல்ல பிளாட்பாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எனவே சீக்கிரத்தில் ரன் ரேட் காக ஆட்டத்தை முடிக்க வேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் இதை பேசி வைத்து விளையாடவே இல்லை. இதுதான் இந்த அணியின் அழகு. அவர்களுக்கு ஆரம்பத்தில் சீக்கிரம் ரன் வந்தது தெரிந்ததும், அவர்களாகவே ஆட்டத்தை சீக்கிரத்தில் முடிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்கள். இங்கு யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா ஆர்சிபி டீமுக்கு வேணும்.. என்னால ரெண்டு விஷயத்தை ஏத்துக்கவே முடியல – பாப் டு பிளேசிஸ் புலம்பல்

மேலும் எங்கள் அணியில் பும்ரா இருப்பது என்னுடைய பாக்கியம். அவர் எப்பொழுது பந்தை கையில் கொடுத்தாலும் தேவையானதை செய்கிறார். தன்னுடைய திறமைகளை பயிற்சி மூலம் உறுதி செய்து கொள்கிறார். இதேபோல திரும்பி வந்திருக்கும் சூர்யா. அவரைப் போன்ற ஏரியாக்களில் அடிக்கும் பேட்ஸ்மேன் அணியில் இருப்பது எப்பொழுதும் நல்லது. அவர் அடிக்கும் திசைகளில் மற்ற பேட்ஸ்மேன்கள் அடித்து நான் பார்த்ததே இல்லை. கடைசி ஆட்டத்தில் ரன் எடுக்க நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன். இந்த போட்டியில் சீக்கிரத்தில் முடித்து விட்டேன். நான் எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடும் முறைக்கு ரசிகன்” என்று கூறியிருக்கிறார்.