சப்போர்ட் பண்றிங்க சந்தோசம்.. ஆனா ப்ளீஸ் இத மட்டும் செய்யாதிங்க – ரசிகர்களுக்கு இஷான் கிஷான் கோரிக்கை

0
324
Ishan

இந்திய கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தலைமையிலான அணி நிர்வாகம் எவ்வளவு சூழ்நிலைகள் வந்த பொழுதும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் பாதுகாத்து தொடர்ச்சியாக இந்திய அணியில் இணைத்துக் கொண்டே வந்தது. அவர் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை என்றாலும் பெஞ்சில் இருக்கும் வாய்ப்பையாவது தொடர்ந்து இந்திய அணியில் பெற்றார். இந்த வாய்ப்பு கூட இன்னொரு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிக முறை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டியின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று கூறி இந்திய அணியில் இருந்து விலகி வீட்டிற்கு வந்தார்.

- Advertisement -

இந்திய அணிக்கு தொடர்ந்து ஆசிய கோப்பையில் இருந்து பயணம் செய்த இஷான் கிஷான் விளையாடும் வாய்ப்பை அதிகம் பெறாமல் வெளியிலேயே இருந்தார். இப்படி விளையாடாமல் தொடர்ந்து அணிவுடன் இருந்து வருவதால் ஏற்படக்கூடிய அவரது மனச்சோர்வை புரிந்து கொண்ட அணி நிர்வாகம், அவருக்கு ஓய்வும் கொடுத்தது.

இங்கிருந்துதான் இஷான் கிஷானுக்கு பிரச்சனைகள் ஆரம்பிக்க தொடங்கியது. அவர் ஓய்வில் இருந்தவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அதே சமயத்தில் அவர் ஓய்வை முடித்துக் கொள்வது பற்றி கூறாததால் அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சேர்க்கவில்லை.

இஷான் கிஷான் அப்படியே அமைதியாக இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால் அவர் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தனது மாநில அணிக்காக ஜார்க்கண்ட் அணிக்கு பங்கேற்காமல், ஐபிஎல் தொடருக்கு தயாராவதற்கு பரோடாவில் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இது இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகவும் கோபம் அடைய வைக்க, அவரை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி-ல அந்த டிபார்ட்மெண்ட்டையே காணோம்.. ஈ சாலா எப்படிப்பா ஜெயிப்பிங்க – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

தற்போது இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இளம் வீரரான அவரை மன்னித்து மீண்டும் சம்பள பட்டியலில் இடம் பெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

சிறிய மாற்றங்கள் எப்பொழுதும் முக்கியமானது

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இஷான் கிஷான் பேசும் பொழுது “மக்களுக்காக என்னுடைய ஒரு சிறிய செய்தி. எல்லோருமே பயிற்சிக்காக மைதானத்திற்கு வருகிறார்கள். ஆனால் நீங்கள் எங்கு சென்றாலும் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை எங்கும் வீசக்கூடாது. உங்கள் நிலத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இப்படியான சிறிய விஷயங்களில் சரியாக இருக்கும் பொழுது நாம் எல்லாவற்றிலும் முன்னேறுவோம். சிறிய மாற்றங்கள் மிக முக்கியமானது. நீங்கள் இதைச் செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.