ஆர்சிபி-ல அந்த டிபார்ட்மெண்ட்டையே காணோம்.. ஈ சாலா எப்படிப்பா ஜெயிப்பிங்க – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
85
RCB

ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்க வைப்பதிலும், வாங்குவதிலும் ஆர்சிபி அணி பல தவறுகளை இதுவரையில் செய்து வந்திருக்கிறது. இதில் முக்கியமான தவறாக பெங்களூரு அணியின் முதுகெலும்பாக சுழற் பந்துவீச்சில் இருந்த சாகலை கழட்டிவிட்டது அமைந்திருக்கிறது. ஏனென்றால் பெங்களூர் மாதிரியான சின்ன மைதானத்தில் சாகலை போல வெற்றிகரமாக இருப்பது சாத்தியமே கிடையாது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு சாகலை கழட்டிவிட்டு அவருடைய இடத்திற்கு பேட்டிங் செய்யக்கூடிய ஸ்பின்னரான இலங்கையின் வனிந்து ஹசரங்காவை 12 கோடி ரூபாய்க்கு பக்கம் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. ஆனால் ஆறு கோடி ரூபாய் கிடைத்திருந்தால் கூட அணியில் இருந்திருப்பேன் என சாகல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆண்டு மினி ஏலத்தில் ஹசரங்காவையும் ஆர்சிபி கழட்டிவிட்டது. மேலும் இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷாபாஷ் அகமதை சன் ரைசர்ஸ்க்கு கொடுத்தது. இதற்கு பதிலாக இவரைப் போலான சுழற் பந்துவீச்சாளர் மயங்க் டாகரை சன்ரைசர்ஸ் அணியிடமிருந்து வாங்கி இருக்கிறது. அவர்களிடம் ஒரே அனுபவ சுழற் பந்துவீச்சாளராக கரன்சர்மா மட்டுமே இருக்கிறார்.

இவர்களா உங்களுடைய ஸ்பின் டிபார்ட்மென்ட்?

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பலவீனம் வெளிப்படையாக தெரிகிறது. அந்த அணியின் வீரர்களை எண்ணத் தொடங்கும் பொழுது ஸ்பின்னர்கள் இல்லை. நீங்கள் ஏன் ஸ்பின்னர்களை வாங்கவில்லை? ஸ்பின்னராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து மயங்க் டாகரை இருக்கிறார்கள். ஆனால் இவர் செய்யக்கூடிய வேலையை ஷாபாஷ் அகமதுவே செய்வார்.

அந்த அணியிடம் அனுபவ சுழற் பந்துவீச்சாளராக கரன் சர்மா இருக்கிறார். அவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். ஆனால் அவரை எல்லா இடத்திலும் பயன்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள். அவரை எல்லா நேரங்களிலும் பந்து வீச பயன்படுத்த போவதில்லை. உங்களிடம் இதை விட்டால் ஸ்பின்னர்கள் வேறு யார் இருக்கிறார்கள். உள்நாட்டு வீரர்கள் ஸ்வப்னில் ஷிங், ராஜன்குமார், ஹிமான்சூ சர்மா. நீங்கள் இவர்களைப் பார்த்தா “ஆகா என்னவொரு ஸ்பின் டிபார்ட்மென்ட்” என்று சொல்வீர்கள்?

- Advertisement -

மேலும் அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் பேட்டிங் ஃபார்ம் மிக முக்கியமானதாக இருக்கும். கடந்த ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் ஃபார்மில் இருந்து அணியை முன்னோக்கி வழிநடத்திச் சென்றார். அவர் சந்தேகத்திற்கு இடமின்றி நிச்சயம் சிறந்த வீரர்.

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு நடந்த அதே சோகம்.. மும்பை இந்தியன்ஸ்க்கும் அப்படியே நடந்த துரதிஷ்டம்

இருப்பினும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்குக்கு பிறகு அவர் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். இப்படி நீண்ட காலமாக வீரர்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது அவர்களுடைய பார்ம் குறித்த சந்தேகத்தை உருவாக்கும். ஒருவேளை இந்த சீசனில் அவருடைய பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லை என்றால், அது நிச்சயம் ஆர்சிபி அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.