ஜெய் ஷா போட்ட உத்தரவு.. மீண்டும் மீறும் இஷான் கிஷான்.. என்ன நடந்து கொண்டிருக்கிறது?

0
284
BCCI

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய வீரர்கள், இந்திய அணிக்குத் தேர்வாகாமல், காயம் ஏதும் இல்லாமல் இருக்கும் பொழுது, அவர்கள் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சில வீரர்கள் இந்திய அணிக்கும் விளையாடாமல் உள்நாட்டு அணிக்கும் விளையாடாமல் தொடர்ச்சியாக ஓய்வில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக அவர்களின் செயல் திறன் மிகவும் குறைகிறது. இவர்களால் திடீரென இந்திய அணிக்குள் வந்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடிவதில்லை.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் தங்கள் அணிகளுக்கு இரண்டு மாத காலம் கிடைப்பதற்காக, ஐபிஎல் தொடருக்கு முன்பாக தங்களை நல்ல ஓய்வில் வைத்துக் கொண்டு, ஐபிஎல் தொடருக்காக பயிற்சிகள் செய்து தயாராக அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

இவற்றையெல்லாம் தடுப்பதற்காக பிசிசிஐ இப்படியான உத்தரவை வெளியிட்டு இருந்தது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளிப்படையாகவே வீரர்களுக்கு எச்சரிக்கையை கொடுத்திருந்தார்.

அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கேட்டுக் கொண்டால் நிச்சயம் உள்நாட்டு சிவப்பு பந்து தொடர்களில் விளையாட வேண்டும். மேலும் தேர்வுக்குழு தலைவருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஓய்வில் இருந்து ஐபிஎல் தொடருக்கு பயிற்சி பெற்று வரும் இசான் கிஷான் மேலும் ஒரு ரஞ்சி போட்டியை ஜார்க்கண்ட் அணிக்காக தவறவிடுகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் ஜார்க்கண்ட் பிளேயிங் லெவனில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை.

இதையும் படிங்க : “என் அப்பா மைதானத்திற்கு தானாக வரவில்லை.. இந்த இந்திய வீரர்தான் வரவைத்தார்” – சர்ப்ராஸ் கான் தகவல்

ஜார்க்கண்ட் அணிக்கு தொடர்ந்து விக்கெட் கீப்பராக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் குமார் குஷ்கரா விளையாடுகிறார். இதன் காரணமாக இஷான் கிஷான் மீது ஏதாவது நடவடிக்கைகள் பாயுமா என்று தெரியவில்லை? ஆனால் பிசிசிஐ இந்த முறை இந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறது. எனவே நிச்சயம் ஏதாவது நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.