“என் அப்பா மைதானத்திற்கு தானாக வரவில்லை.. இந்த இந்திய வீரர்தான் வரவைத்தார்” – சர்ப்ராஸ் கான் தகவல்

0
974
Sarfaraz

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய மூன்றாவது டெஸ்டில் முதல் நாள் மைதானம் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டது.

சர்ப்ராஸ் கான் அறிமுகத்தில் அவரது தந்தையும் பயிற்சியாளருமான நவ்ஷாத் கான் கலங்கியது, தந்தை மற்றும் மனைவியின் முன்னாள் அதிரடியாக அரைசதம் சர்பராஸ் கான் அடித்தது என மைதானத்தில் ஒரே உணர்ச்சி மையமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று பேசியிருந்த சர்ப்ராஸ் கான், தன் தந்தை முதலில் மைதானத்திற்கு வர விரும்பவில்லை என்றும், பிறகு சிலர் அவரை வற்புறுத்தி மைதானத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் நேற்று பேட்டியில் தன் தந்தையை வற்புறுத்தி அனுப்பி வைத்த அந்த சிலர் யார் என்பது குறித்து சர்ப்ராஸ் கான் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இன்று அது யார் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து முதலில் பேசிய அவருடைய தந்தை நவுஷாத் கான் கூறும் பொழுது “நான் முதலில் மைதானத்திற்கு வரக்கூடாது என்று நினைத்தேன். அது என் மகனுக்கு அழுத்தத்தை உருவாக்கும் மேலும் எனக்கும் கொஞ்சம் சளி இருந்தது. ஆனால் எனக்கு சூரியகுமார் யாதவ் அனுப்பிய ஒரு மெசேஜ் உருக வைத்து விட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

தன் தந்தைக்கு சூரியகுமார் யாதவ் அனுப்பி இருந்த மெசேஜை சர்பராஸ் கான் எடுத்து எல்லோருக்கும் வாசித்துக் காட்டினார். உண்மையில் சர்பராஸ் கான் மிகவும் உருக்கமான ஒரு மெசேஜைதான் அனுப்பி இருக்கிறார்.

சர்பராஸ் கான் படித்த சூரியகுமார் அனுப்பிய மெசேஜில் “உங்கள் உணர்ச்சிகளை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நான் சொல்கின்ற ஒன்றை மட்டும் நீங்கள் நம்புங்கள். நான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகம் ஆனேன். ஆனால் அப்போது அதைப் பார்க்க அங்கு என் தாயும் தந்தையும் இல்லை.

சில தருணங்கள் எப்பொழுதும் விசேஷத்திற்கு அப்பாற்பட்டது. இப்படியானதருணங்கள் வருவது கிடையாது. எனவே நீங்கள் மைதானத்திற்கு செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க :நான் உனக்கு தொப்பி கொடுத்தேன்.. கடைசியில அந்த துரதிஷ்டம் உன்னை தாக்கிடுச்சு” – சர்ப்ராஸ் கான் ரன் அவுட் பற்றி அனில் கும்ப்ளே கருத்து

சூரியகுமார் யாதவியின் இந்த உருக்கமான வேண்டுகோளுக்குப் பிறகு சர்ப்ராஸ் கான் தந்தை போட்டியை பார்ப்பதற்கு மைதானத்திற்கு வந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் மும்பை மாநில அணிக்காக விளையாடக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.