ஸ்ரேயாஸ் இஷான் ஓகே.. ஹர்திக் பாண்டியா மேல கை வைப்பிங்களா?” – இர்பான் பதான் பிசிசிஐ-கு நேரடி கேள்வி

0
371
Irfan

பிசிசிஐ வீரர்கள் மீது காட்டும் திடீர் கெடுபிடி இந்திய கிரிக்கெட்டில் பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. எந்த வீரராக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ மிகவும் உறுதியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழு புதிய தலைவராக இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

- Advertisement -

இவர் தேர்வு குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்ததிலிருந்து இந்திய கிரிக்கெட்டில் நிறைய அதிரடியான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பணிச்சுமையின் காரணமாக ஜெய்ஸ்வால் இருக்கும்பொழுதே, தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சாய் சுதர்சனை கொண்டு வந்தார்கள்.

இதேபோல் விராட் கோலி, முகமது சமி, கேஎல்.ராகுல் ஆகியோர் இல்லாத பொழுது, மூத்த வீரர்கள் புஜாரா,உமேஷ் யாதவ் மற்றும் ரகானே ஆகியோரிடம் செல்லாமல், மிகத் தைரியமாக இளம் வீரர்களுக்கு சென்று வாய்ப்பு கொடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் ஆசியக் கோப்பையில் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரது காயத்தை பின் தொடர்ந்து பார்த்து இருந்து, தொடர்ந்து காத்திருந்து அவர்களை உள்ளே கொண்டு வந்து உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட வைத்திருந்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் இந்திய அணிக்கு தேர்வு செய்யக்கூடாது என்கின்ற கோரிக்கையை பிசிசிஐக்கு வைத்திருக்கிறார்கள். இவர்கள் முழு சுதந்திரமாக செயல்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தராத காரணத்தினால் இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய கிரிக்கெட் சம்பள பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது இதுகுறித்து கருத்து கூறியுள்ள இர்பான் பதான் கூறும்பொழுது “ஸ்ரேயாஸ் மற்றும் இசான் இருவரும் திறமையான வீரர்கள். அவர்கள் மீண்டும் திறமையாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்பி வருவார்கள் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : 3 மடங்கு சம்பளம்.. ஐபிஎல் தொடருக்கு இணையாக உள்நாட்டு மற்றும் இந்திய வீரர்களுக்கு உயர்வு.. புதிய தகவல்கள்

அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சிவப்புப்பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்றால், அவர்கள் குறைந்தபட்சம் உள்நாட்டில் நடைபெறும் வெள்ளை பந்து தொடர்களில் கலந்து கொள்ளவேண்டுமா? இது தேசிய கடமையில் இல்லையா? இந்த அதிரடி முடிவு அனைத்து இந்திய வீரர்களுக்கும் பொருந்தாவிட்டால், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எதிர்பார்த்த முடிவுகளை எட்ட முடியாது? என வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார்.