சிஎஸ்கே அணிக்கு இந்த 2 பேட்ஸ்மேன் பிரச்சனை கிடையாது.. இதுதான் தொந்தரவா இருக்கு – மைக் ஹசி பேட்டி

0
2031
Hussey

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எட்டு போட்டிகளில் விளையாடி தலா நான்கு போட்டிகளில் வெற்றி, தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக மோத இருக்கும் நிலையில், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணி, துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரில் மிச்சல் இருவரும் ரன்கள் எடுக்க சிரமப்படுகின்ற காரணத்தினால், ரகானே மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அதிகம் நம்பி இருக்க வேண்டியதாக இருக்கிறது. இதன் காரணமாக இருவரையும் பேட்டிங் வரிசையில் மேலே அனுப்ப வேண்டி இருக்கிறது.

- Advertisement -

துவக்க இடத்திற்கு வரும் ரகானே பெரிய அளவில் அதிரடியாக விளையாட முடியவில்லை. அதேபோல் நான்காவது இடத்திற்கு அனுப்பப்படும் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட் எதிர்பார்க்கும் அளவிற்கு வேகமாக பேட்டிங் செய்வதில்லை. 250 ரன்களை அசால்ட்டாக மற்ற அணிகள் எடுத்து வருகின்ற நேரத்தில், சிஎஸ்கே அணியால் பெரிய ஸ்கோர்களுக்கு செல்லும் வகையில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறும்பொழுது “ரவீந்திர ஜடேஜா தற்பொழுது வித்தியாசமான ரோலில் நான்காவது இடத்தில் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் பேட்டிங் வரிசையில் கீழே வந்து கொண்டிருந்தார். தற்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மேலே வந்து அவர் சிறப்பாகவே விளையாட செய்திருக்கிறார்.

அவர் நல்ல மனநிலையில் இருப்பதோடு, வலைப் பயிற்சியில் பந்தை நன்றாக அடித்து விளையாடுகிறார். மேலும் லக்னோவுக்கு எதிராகவும் அவர் வேகமாக விளையாடி ரன்கள் எடுத்தார். அவரால் பந்தின் வேகத்தை பயன்படுத்தி கேப் கண்டுபிடித்து விளையாட முடியும். மேலும் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க: ரோகித் பேச்சுக்கு எதிர்ப்பா? இம்பேக்ட் பிளேயர் விதியை குறை சொல்லிக்கிட்டே இருக்க முடியாது – ஆவேஷ் கான் கருத்து

மேலும் நாங்கள் ரகானேவுக்கு 100% ஆதரவாக இருக்கிறோம். அவருக்கு கொஞ்சம் காலில் நிக்கில் இருந்தது. அவர் சரியாகி வருகிறார். எங்களுக்கு தேவையான சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். ஆனால் பனிப்பொழிவுதான் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய பிரச்சனையை கடந்த சில போட்டிகளாக உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக எங்கள் சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை நன்றாக இறுக்கிப் பிடித்து வீசக் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் தற்போது பிரச்சினையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.