கோலி கிட்ட இந்த விஷயத்துல கேள்வி கேட்காதிங்க.. கெயிலை விட அவர் பெரிய ஆளு – இர்பான் பதான் பேட்டி

0
65
Irfan

நடப்பு ஆண்டு 2024 ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கு பெறுகின்ற காரணத்தினால், இறுதிப் போட்டிக்கு முன்பாக மொத்தம் மூன்று சுற்றுகள் போட்டி நடக்கின்றது.

முதல் சுற்றை தாண்டுவது எளிதான ஒன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டாவது சுற்றில் பலம் வாய்ந்த எல்லா அணிகளும் ஒரே இடத்தில் இருக்கும். எனவே இந்த இடத்தை கடந்தால் மட்டுமே அரை இறுதிக்கு தகுதிப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் போட்டி மிக அதிக அளவில் இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகளும், தங்களது அணிகளை வருகின்ற மே ஒன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் சமர்ப்பித்த அணிகளில் ஏதாவது மாற்றம் செய்வது என்றால், மே 26 ஆம் தேதி வரையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இருந்து, டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் சில வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் தேர்வு குழு கொஞ்சம் பொறுமை காட்டி வருகிறது.

மிகக்குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. மேலும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுக்கப்பட வேண்டுமா வேண்டாமா? என திடீர் விவாதங்கள் யாராலும் கிளப்பப்பட்டு பரபரப்படைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க :ராஜஸ்தான் வீரர்கள்கிட்ட அழுத்தத்துல இத பாக்க முடியும்.. காரணம் சஞ்சு சாம்சன்தான் – ஆரோன் பின்ச் பாராட்டு

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “என்னுடைய t20 உலகக்கோப்பை அணியில் முதல் மூன்று இடங்களில் ரோகித் சர்மா கேப்டனாக முதல் இடத்தில் இருப்பார். ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பதற்கு முன்பாகவே, இந்தியாவுக்காக விளையாடிய பொழுதே, இன்னொரு துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தை பிடித்து விட்டார். மூன்றாவது இடத்தில் நிச்சயம் விராட் கோலி இருப்பார். அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்து கேள்விகள் கேட்கப்படக்கூடாது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 138. இது கிரீஸ் கெயிலை விட டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.