ராஜஸ்தான் வீரர்கள்கிட்ட அழுத்தத்துல இத பாக்க முடியும்.. காரணம் சஞ்சு சாம்சன்தான் – ஆரோன் பின்ச் பாராட்டு

0
39
Sanju

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளை வென்று இருக்கிறது. மேலும் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதை தற்பொழுது 99 சதவீதம் உறுதி செய்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கேப்டனாக சஞ்சு சாம்சன் திறமையாக வழிநடத்துகிறார். இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் பாராட்டி இருக்கிறார்.

நேற்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் 180 ரன்கள் நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பட்லர் விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி நூறு ரன்களைக் கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கியதும், கேப்டன் சஞ்சு சாம்சன் தன்னுடைய அதிரடியை நிறுத்திவிட்டு, இளம் வீரர் சதம் அடிப்பதற்கான அருமையான ஒத்துழைப்பை கொடுத்தார்.

இது மட்டும் இல்லாமல் ஸ்டெம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பராக மற்றும் கேப்டனாக மிகச் சிறந்த முறையில் அணியை களத்தில் வழி நடத்துகிறார். தற்பொழுது ஐபிஎல் தொடரில் இருக்கும் கேப்டன்களில் இவருக்கு தான் பல முன்னாள் வீரர்களால் முதல் மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. மேலும் இவரை விக்கெட் கீப்பராக டி20 உலகக் கோப்பைக்கு கட்டாயம் தேர்வு செய்யப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

சசாம்சன் குறித்து ஆரோன் பின்ச் பேசும்பொழுது “சஞ்சு சாம்சன் மிகவும் முதிர்ச்சியாக அழகாக விளையாடுகிறார். இதுதான் அணிக்கு தேவையாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட்டில் சில நேரம் வீரர்களின் ஈகோ அணிக்கு உதவி செய்வதாக கூட இருக்கலாம். ஆனால் சஞ்சு சாம்சன் அப்படி எந்தவித ஈகோவும் இல்லாமல், சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் அவங்கள தூண்டி விட்டுட்டேன்.. ஆனா ஏமாற விரும்பல.. டி20 உ.கோ விளையாடுவது பற்றி சுனில் நரைன் பேச்சு

அவர் நம்ப முடியாத அளவுக்கு மிகத் திறமையாக அணியை வழிநடத்தி வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கும் பொழுது அந்த அணி வீரர்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும். குஜராத் அணிக்கு எதிராக அவர்கள் தோல்வி அடைந்த ஒரு போட்டியை தவிர, மற்ற எல்லா போட்டிகளிலும் மிக அருமையான நிலையில் விளையாடியிருக்கிறார்கள். இதற்கான பெருமை கேப்டன் சஞ்சு சாம்சனுக்குதான் சேரும்” எனக் கூறியிருக்கிறார்.