தோனி சீக்கிரம் வந்து கம்மின்ஸின் அந்த பிளானை உடைச்சு இருக்கலாம்.. இது சரியில்ல – இர்ஃபான் பதான் மைக்கேல் வாகன் கேள்வி

0
72
Dhoni

நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 18.1 ஓவரில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் தோனி கடைசி மூன்று பந்துகள் இருக்கும் பொழுதே களத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி பவர் பிளேவில் ஓரளவுக்கு சுமாராக ஆரம்பித்தது. இதற்கு அடுத்து மிடில் ஓவர்களில் சிவம் துபே வந்து அதிரடியாக விளையாட ரன்கள் கிடைத்தது. ஆனால் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் கடைசி ஏழு ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு 42 ரன்கள் மட்டுமே வந்தது. நேற்று சிஎஸ்கே தோல்வி அடைவதற்கான முக்கிய காரணமாக இது அமைந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் கருப்பு மண்ணில் அமைக்கப்பட்ட மிகவும் மெதுவான ஆடுகளம் ஆகும். இது கிட்டத்தட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளம் போலவே இருந்தது. இதை மீண்டும் மிகச் சிறப்பாக பயன்படுத்திய கேப்டன் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களை மெதுவாக வீசவைத்து சிஎஸ்கே வின் பேட்ஸ்மேன்களை கட்டி போட்டார்.

இங்கு பந்தை பார்த்து வலுவாக அடிக்கக் கூடிய தோனி போன்ற பேட்ஸ்மேன்கள் தேவையாக இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் மிகவும் கீழே இருந்தபோதிலும், இப்படியான ஆடுகளங்களில் விளையாடி பழக்கப்பட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டிய இடத்தில், மீண்டும் டேரில் மிட்சல் வந்து விளையாடினார். அந்த இடத்தில் தோனி வந்து விளையாடி இருந்தால் இன்னும் கொஞ்சம் ஸ்கோர் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறும் பொழுது ” அவர்கள் ஆடுகளத்தை பயன்படுத்தி ஆப் கட்டர் திட்டத்தை கொண்டு வந்தது, புவனேஸ்வர் குமார் மற்றும் உனட்கட் ஆகியோரின் பந்துவீச்சு தந்த போட்டிக்கு எதிராக, இந்த இடத்தில் வலதுகை பேட்ஸ்மேன் தோனி தன்னுடைய பேட்டி ஆர்டரை உயர்த்தி மேலே வந்திருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பைக்கு டிக்கெட் போடுங்க.. சிவம் துபேவால் அவங்க 4 பேருக்கு சிக்கல்தான் – சேவாக் மற்றும் யுவராஜ் பாராட்டு

இது விஷயம் தொடர்பாக கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ” கடந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர் இந்த முறை பேட்டிங் செய்ய சீக்கிரம் வராதது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் மூன்று பந்துகள் மட்டுமே இருக்கும் பொழுது பேட்டிங் செய்ய வந்தார் என்று எனக்குப் புரியவே இல்லை” என்று கூறி இருக்கிறார்.