நான் உருவாக்க நினைச்ச இந்திய அணி இப்படிப்பட்டது தான்.. அதிகம் தாழ்வுகளையே சந்திச்சேன் – ரோகித் சர்மா பேட்டி

0
449
Rohit

கடந்த வாரத்தில் டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். தற்பொழுது அவர் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் வெளிப்படையான பதில்களை கூறி இருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு விராட் கோலி 3 வடிவ இந்திய கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார். இதற்குப் பிறகு ரோகித் சர்மா முழுமையாக 3 இந்திய அணிக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். அங்கிருந்து இந்திய அணிக்கு சில முக்கியமான தோல்விகள் வந்திருந்த போதும், நிறைய பரிசோதனை முயற்சிகளின் மூலமாக புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு ஏற்றதில் இருந்து இளம் வீரர்கள் பலருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சாய் சுதர்சன் வரை வெகு சீக்கிரத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தேவையான வீரர்களை உருவாக்குவதில் பெரும் கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா பேசும்பொழுது “இந்த கிரிக்கெட் பயணம் அற்புதமானது, 17 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடி உலகக் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று நம்புகிறேன். உங்கள் நாட்டு அணியின் கேப்டன் பொறுப்பில் நீங்கள் இருப்பது மிகப்பெரிய கௌரவம். இந்த பொறுப்புக்கு நான் வருவேன் என்று ஒரு நாள் கூட நான் நினைத்தது கிடையாது.

என் ஒட்டுமொத்த வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் பொழுது நான் ஏற்றங்களை விட அதிக இறக்கங்களையே சந்தித்திருக்கிறேன். இதன் வழி வந்த அனுபவத்தின் காரணமாகவே, நான் எல்லா சூழ்நிலையிலும் ஒரு மனிதனாக சரியானவனாக இருந்திருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மைய சொல்றேன்.. சாம்சன் பாய் எனக்கு இதுல வாய்ப்பு தரல.. ஆனா நான் விடல – ரியான் பராக் பேட்டி

நான் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியில் உள்ள எல்லோரையும் ஒரே திசையில் பயணிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். இது தனிப்பட்ட வீரர்களின் சாதனைகள் மற்றும் புள்ளி விபரங்கள் பற்றி அது கிடையாது. இது ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவது மற்றும் கோப்பையை வெல்வது பற்றியது” என்று கூறியிருக்கிறார்