டி20 உ.கோ தினேஷ் கார்த்திக் வேணாம்.. தோனியால் நடந்தது தான் மீண்டும் நடக்கும் – இர்பான் பதான் பேட்டி

0
1968

இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் பினிஷிங் ரோலில் களம் இறங்கி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இவரை டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என பலரும் கூறிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் இவரை டி20 அணியில் சேர்க்கக்கூடாது என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

இந்த சீசனைப் பொருத்தவரை தினேஷ் கார்த்திக் செயல்பாடு பெங்களூர் அணியில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. தொடர்ச்சியாக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும், அவர் கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் குறித்து கூறிய முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பாத்தி ராயுடு “நான் சிறு வயதில் இருந்தே தினேஷ் கார்த்திக்கை பார்த்து வருகிறேன். இவர் மிகவும் திறமையானவர். இவர் மகேந்திர சிங் தோனியின் நிழலில் இருந்து வருவதால் இவருக்கான நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக இவர் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் மேட்ச் வின்னர் ஆகலாம்.

உலகக் கோப்பையுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க பொன்னான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். எனவே இவரை டி20 உலக கோப்பை காண இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று போட்டிக்கு பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேட்டியளித்தார்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் தான் அம்பத்தி ராயுடுவின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. தினேஷ் கார்த்திக்கை ஏன் எடுக்க கூடாது என்பதற்கான காரணங்களை அவர் கூறும் பொழுது “சர்வதேச அணியில் அறிமுகமாகாத பந்துவீச்சாளரை எதிர்கொள்வதற்கும், அனுபவமான பந்துவீச்சாளரை எதிர்கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. தோனியின் நிழலில் விளையாடினார் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

- Advertisement -

இப்போது தோனி இல்லாததால் ரிஷப் பண்டு தினேஷ் கார்த்திக் நிழலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் ரிசப் பண்ட் பார்மில் இல்லாமல் இருந்திருந்தால் நான் இந்த கருத்தை ஒப்புக் கொண்டிருப்பேன். நான் தினேஷ் கார்த்திக்கை நிச்சயமாக பாராட்ட வேண்டும். அவர் தற்போது சிறந்த பார்மில் இருக்கிறார் ஆனால் இந்திய கிரிக்கெட் வேற லெவலில் உள்ளது. உலக கோப்பையில் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள் உங்களுக்கு பந்து வீசப்போவதில்லை.

இதையும் படிங்க: கோலி பவுலிங் போடட்டும்.. 11 பேட்ஸ்மேன் வச்சு ஆடுங்க – ஸ்ரீகாந்த் ஆர்சிபி மீது விமர்சனம்

உலகக்கோப்பையில் 11 வீரர்கள் மட்டுமே உள்ளனர். எனவே அந்த சூழ்நிலையில் விளையாடுவது இங்கு விளையாடுவதை காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இது ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு நியாயமானதாக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.