“சிஎஸ்கே இல்ல.. இந்த டீம்க்குதான் விசுவாசமான ரசிகர்கள் அதிகம்” – இர்பான் பதான் கருத்து

0
109
Irfan

இந்தியா இங்கிலாந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் மாதம் மத்தியில் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் இறுதியில் முடிவடைகிறது.

இந்த முறை மினி ஏலம் முடிந்த பிறகு மொத்த அணிகளையும் பார்க்கும் பொழுது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மிகவும் போட்டி கொடுக்கக்கூடிய அணிகளாக தெரிகின்றன.

- Advertisement -

இதுவரை நடைபெற்ற எல்லா ஐபிஎல் ஏலங்களிலும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்திக்கும் அணியாக பெங்களூர் அணி இருந்து வந்திருக்கிறது.

இந்த முறை நடைபெற்ற மினி ஏலத்திலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஏலக்குழு மிகவும் சுமாராகவே செயல்பட்டதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

உலகம் முழுவதிலும் இருந்து மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை ஈர்த்து வைத்திருக்கும் ஒரு பெரிய அணி, 16 ஆண்டுகளாக ஒரு தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது அதிசய முரணாக இருக்கிறது.

- Advertisement -

இந்த முறையும் அந்த அணி கோப்பையை வெல்லும் அளவுக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை. பெங்களூர் மைதானத்திற்கு எந்த அணியாலும் தாக்குப் பிடிக்க முடியாததுதான், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு காரணமா? என்றும் தெரியவில்லை.

உலகம் எங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலிக்காக ஒரே ஒரு முறை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்றால் நல்லது என நினைக்கிறார்கள். இந்த முறை அப்படி நடந்தால் அது அதிசயம்தான்.

இதுகுறித்து பேசி உள்ள இர்பான் பதான் கூறும்பொழுது “ஆர்சிபி மற்றும் அதன் ரசிகர்களின் உறவும் மாதிரி நான் வேறு எங்கும் பார்த்தது கிடையாது. உலகம் முழுவதிலும் பெரிய விசுவாசமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இரண்டு முறை கோப்பையை நெருங்கி வந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “கொல்கத்தா டீமின் தோனி ரிங்கு சிங் கிடையாது.. இந்த பையன்தான்” – கவாஸ்கர் கருத்து

2016 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு மிக அருமையான சீசன் அமைந்திருந்தது. விராட் கோலியும் ஆர்சிபி அணியும் கோப்பையை வென்றால், அது ஆர்சிபி வரலாற்றில் மட்டுமில்லை, ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய தருணமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.