“கொல்கத்தா டீமின் தோனி ரிங்கு சிங் கிடையாது.. இந்த பையன்தான்” – கவாஸ்கர் கருத்து

0
173
Gurbaz

ஐபிஎல் தொடர் அடுத்து மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடையும் என்று தெரிகிறது. இந்தியாவில் இது தேர்தல் காலம் என்பதால் இன்னும் இது குறித்தான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் ஐபிஎல் தொடர்பான பேச்சுகள் கிரிக்கெட் வட்டாரங்களில் ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு பேப்பரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்தபடியாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. அவர்கள் சரியான வீரர்களை பெற்றிருக்கிறார்கள், அதே சமயத்தில் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த மினி ஏலத்தில் 24.75 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்திரேலியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு கொடுக்கப்பட்ட மிக அதிகபட்ச தொகை இதுதான்.

இந்த நிலையில் வருகின்ற ஐபிஎல் தொடரில் எந்த வீரர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முக்கியமானவர்கள்? அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா? என்பது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குர்பாஸ் மிகவும் ஆக்ரோஷமான வீரர். நான் பார்த்தவரை அவரது பேட்டிங் எனக்கு பிடித்திருக்கிறது. அவருடைய பேட்டிங்கில் கொஞ்சம் மகேந்திர சிங் தோனியின் சாயல் இருக்கிறது.

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும், அவர் டெல்லியில் சாலைவாசிகளுக்கு பணம் கொடுத்தார். இப்படியான காரியத்தை செய்த அந்த வீரர் என்னுடைய அணியில் கட்டாயம் இருக்க வேண்டும்.

அந்த அணிக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு எளிதாக இருக்கப் போவது கிடையாது. ஆனால் கொல்கத்தா ஆடுகளம் போன்ற ஆடுகளத்தில் விளையாடிய அனுபவமும் மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமும் இவர்களுக்கு இருக்கிறது.

இதையும் படிங்க : “29 வயது வீரர்.. எந்த இந்திய அணியிலும் இடம் கிடைக்காது.. இத முடிவு செய்யனும்” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

இந்த அணியில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் மற்றும் குர்பாஸ் ஆகிய நான்கு பேரும் முக்கிய பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். இதில் சமிப காலத்தில் சமீப காலத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.