பும்ரா கிட்ட பேசினப்ப ஒரு விஷயத்தை சொன்னார்.. மிரண்டு போயிட்டேன்.. சிஎஸ்கே தப்பிக்கிறது கஷ்டம் – அஸ்வின் பேச்சு

0
461
Ashwin

இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இரவு நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் வரும் என்றும், பும்ரா மிக முக்கிய ஆயுதமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருப்பார் என்றும் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு ஒரு எச்சரிக்கையை செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தாலும் கூட, அவர்கள் தங்களின் சரியான பிளேயிங் லெவனை ஓரளவுக்கு கண்டுபிடித்து, தற்பொழுது அதிரடியான முறையில் விளையாடுகிறார்கள். கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீச்சில் பும்ரா ஒரு பெரிய ஆயுதமாக இருந்து வருகிறார். பவர் பிளேவில் ஒரு ஓவர், மிடில் ஓவர்களில் ஒரு ஓவர், இறுதிக்கட்ட ஓவர்களில் இரண்டு ஓவர் என அவருக்கு பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத்தின் மூன்று பகுதிகளிலும் பந்துவீச்சில் வரும் பும்ரா, சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு விக்கெட்டுகளையும் கைப்பற்றி வருகிறார். ஐந்து போட்டிகளில் தற்பொழுது அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டிக்கு பிறகு நான் பும்பராவிடம் பேசிக் கொண்டிருந்தேன். வான்கடே ஆடுகளத்தில் ரத்தக்களரியாக இருக்கும் என அவர் கூறினார்.அவர்கள் இங்கு பயிற்சி ஆட்டங்களில் 250 ரன்களை ஷேர் செய்கிறார்களாம். மேலும் இந்த ஆண்டு டெல்லிக்கு எதிராக இந்த மைதானத்தில் 230 ரன்னுக்கு மேல் எடுத்திருந்தார்கள். அதே 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மும்பை மைதானத்தில் ஆரம்பத்தில் முதல் மூன்று ஓவர்களில் பந்து மிக நன்றாக ஸ்விங் ஆகிறது. எனவே இங்கு முதல் மூன்று ஓவர்கள் பந்துவீச்சுக்கு நன்றாக அமைகிறது. நீங்கள் மூன்று ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் 20 ரன்கள் எடுத்திருந்தால் கூட உங்களிடம் 10 விக்கெட் இருந்தால் பெரிய விஷயம். இதனால் பவர் பிளேவின் இரண்டாவது பகுதியில் ரத்தக்களரியாக மாறுகிறது.

இதையும் படிங்க : சும்மா விமர்சிக்காதிங்க.. ரஞ்சி டெஸ்ட் பவுலரை ஓபனிங் பேட்டிங் அனுப்பியது இதுக்குதான் – சஞ்சு சாம்சன் விளக்கம்

இதில் மிக முக்கிய விஷயமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், முதல் மூன்று ஓவர்களுக்கு பந்து வீசுவது எளிதாக இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் பும்ராவை பந்து வீச கொண்டு வருவதில்லை. இதற்குப் பிறகு அவரைக் கொண்டு வந்து தற்காப்புக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -